பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 25,

- م.

பிறகு வரும் 12-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "இந்த வகைகளாகிய பெருமைகளைப் பெற்ற அழகிய திருமுனைப்பாடி நாட்டில் எத்தனையோ பலவாகிய ஊர் களும், எந்தக் காலத்திலும் உண்மையாக உள்ள வளங்கள் ஓங்கியிருக்குமாறு வளர்ந்து வரும் மேம்பாட்டைப் பெற்றவை:அத்தகைய வளங்களைப் பெற்ற அந்த ஊர்களுக் குள் சைவ சமய வழியை ஏழு உலகங்களில் வாழ்பவர்களும் பாதுகாக்கும் பான்மையால் தெய்வத் தன்மையைக் கொண்ட வழியாகிய சைவ சமயத்தைப் பெருகி வளருமாறு - புரியும் செல்வத்தைப் பெற்றதாகும் தலம் திருவாய்மூர்

என்பது." பாடல் வருமாறு:

  • இவ்வகைய திருநாட்டில் எனைப்பலவூர் களுமென்றும்

மெய்வளங்கள் ஓங்கவரும் மேன்மையன: ஆங்கவற்றுள் சைவநெறி ஏழுலகும் பாலிக்கும் தன்மையினால் - தெய்வநெறிச் சிவம்பெருக்கும் திருவாமூர் திருவாங்மூர்.” இவ்வகைய-இந்த வகைகளாசிய பெருமைகளைப் பெற்ற வகை: ஒருமை பன்மை மயக்கம். திரு.அழகிய; செல். வர்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். எனைஎத்தனையோ. ப்:சந்தி. பல ஊர்களும்-பலவாகிய ஊர்களும். என்றும்-எந்தக் காலத்திலும். மெய்-உண்மையாக உள்ள. வளங்கள். நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், ஆலய வளம் முதலிய வளங்கள். ஓங்க-ஓங்கியிருக்கு மாறு. வரும்-வளர்ந்து வரும். மேன்மையன-மேம்பாட்டைப் பெற்றவை. ஆங்கு-அத்தகைய வளங்களைப் பெற்ற. அவற்றுள்-அந்த ஊர்களுக்குள். சைவ-சைவ சமயமாகிய, நெறி-வழியை. ஏழுலகும்-ஏழு உலகங்களில் வாழ்பவர்களும்; இட ஆகு பெயர்; உலகும். ஒருமை பன்மை மயக்கம். பாலிக் கும்-பாதுகாத்து வரும். தன்மையினால்-பான்மையால். தெய்வ-தெய்வத்தன்மையைப் பெற்ற நெறி-வழியாகிய. ச்: சந்தி. சிவம்:சைவ சமயத்தை. பெருக்கும் -பெருகி.