பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 299

.தர்யைப் போன்றவளாகிய திருநிலை நாயகி வழங்கிய அழகிய அமுதத்தைப் போன்ற பால்ை அந்தத் திருஞான . சம்பந்த மூர்த்தி நாயனார் குடித்தருளிய சமயத்திலேயே ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களைக் கொண்ட இசைப்பாடல்களாகிய சொற்சுவை பொருட்சுவை என்னும் .சுவைகளாகிய வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை, 'இந்தப் பிரமபுரீசன் அடியேங்களுடைய தலைவன்’ என்று சுட்டிக் காட்டி பாடியருள வல்லவரும் சீகாழியில் திருவவதாரம் செய்தருளும் பெருமையையும் தகுதியையும் கீர்த்தியையும் திருநாவுக்கரசு நாயனார் கேட்டவுடன் வியப்பை உடைய தாகும் விருப்பம் மிகுதியாக எழ அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய அழகிய வெற்றிக் கழல் களைப் பூண்ட திருவடிகளைப் பணியும் பொருட்டு அந்தித் திருநாவுக்கரசு நாயனார். தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த விருப்பம் வாய்ப்பாக அமைய, பாடல்

வருமாறு:

ஆழிவிடம் உண்டவரை அம்மை திருப்

பாலழுதம் உண்ட போதே ஏழிசைவண் தமிழ்மாலை, இவன் எம்மான்’

எனக்காட்டி இயம்ப வல்ல காழிவரும் பெருந்தகை சீர் கேட்டலுமே

அதிசயமாம் காதல் கூர வாழியவர் மணிக்கழல்கள் வணங்கு தற்கு

மனத்தெழுந்த விருப்பு வாயப்ப. ' இந்தப் பாடல் குளகம். ஆழி, திருமால் பள்ளிகொண் கடருளிய பாற்கடலில் எழுந் த.விடம்,ஆலகால நஞ்சை.உண்ட வரை-விழுங்கியவராகிய பிரம ரீசரை. அம்மை-தாயைப் போன்றவளாகிய திருநிலை நாயகி. திரு-அழகிய, ப்:சந்தி. :பாலமுதம்-தன்னுடைய கொங்கைகளிலிருந்து கறந்த அ.மு.