பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.308 பெரிய புராண விளக்கம்-6

போன்ற தம்முடைய திருக்கரங்களால் அந்தத் திருநாவுக் கரசு நாயனாரை எடுத்து விட்டு அவரை வணங்கி இடப வாகனத்தின்மேல் எழுந்தருள்பவராகிய பிரமபுரீச்ரை அழுது அழைத்துக் கொண்டவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், அப்பரே' என்று திருநாவுக்கரசு நாயனாரை அழைக்க அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும், "அடியேன்” என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்."

பாடல் வருமாறு: . , .

  • தொழுதணைவுற் றாண்ட அரசன் புருகத் தொண்டர் குழாத் திடையே சென்று புழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்த வர்தம் கரங்கள் பற்றி எழுதரிய மலர்க்கையால் எடுத் திறைஞ்சி

விடையின் மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண் டவர் தாம்

" அப்பரே எனஅவரும், அடியேன் - '. என்றார். ’’ தொழுது-அவ்வாறு சீகாழிக்கு எழுந்தருளித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வண்ங்கி. அனைவுற்றுஅடைந்து, ஆண்ட வீரட்டானேசுவரர் தடுத்து ஆட் கொண்ட அரசு-திருநாவுக்கரசு நாயனார்:தினை மயக்கம். அன்பு-பக்தியினால். உருக-தம்முடைய திருவுள்ளத்தில்உருக் கத்தை அடைய. த்:சந்தி. தொண்டர்-திருத்தொண்டர்கள்; ஒருமை பன்மை மயக்கம். குழாத்திடை-கூடியிருந்த கூட்டத் துக்கு நடுவில். ஏ. அசைநிலை. சென்று-எழுந்தருளி. பழுது -ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. பெரும்-பெருகி எழும். காதலுடன்-விருப்பத்தோடு, அடி-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்கம்.பணிய-விழுந்து வணங்க. ப்:சந்தி. பணிந்து -அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவடிகளில் விழுந்து