பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பெரிய புராண விளக்கம்-ன்

கிரிச் செய்ய தம்முடைய கண்களிலிருந்து வழியும் நீர் மழை. யைப் போலச் சொரிய திருநாவுக்கரசு நாயனாரும் உண்மை: பாகிய அறுபத்து நான்கு கலைகளைக் கற்கும் சொற்கள் சொரியத் தம்முடைய திருவுள்ளத்தில் கசிவை அடைந்து: பாடியருள.' பாடல் வருமாறு:

பண்பயில்வண் டறைசோலை சூழும் காழிப்

பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு விண் பணிய ஓங்குபெரு விமானங் தன்னை

வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த எல்லைச் சண்பைவரு பிள்ளையார், அப்ப்ர் உங்கள்

தம்பிரா னாரைநீர் பாடீர். , என்னக் கண்பயிலும் புனல்ப்ொழிய அரசும் வாய்மைக்

கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.'" பண்.பண்ணின்ைப் போல. பயில்-ரீங்காரம் செய்யும். வண்டு-வண்டுகள்:ஒருமை பன்மை மயக்கம். அறை-முரலும். சோலை-மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில். சூழும்-சுற்றியிருக் கும். காழி-சீகாழியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்; ஆகு பெயர். ப்ரமர்-பரமேசுவரராகிய பிரமபுரீசரு. டைய ஆலயத்திற்கு முன்னால் உயரமாக நிற்கும். திரு-அழ. கிய க்:சந்தி. கோபுரத்தை-கோபுர வாசலில் இருந்த படியே: உருபு மயக்கம், ப்:சந்தி. பணிந்து-பிரமபுரீசரைத் திருநாவுக் கரசுநாயனார் வணங்கி விட்டு, உள்-அந்த ஆலயத்துக்கு. உள்ளே. புக்கு-நுழைந்து. விண்-ஆகாயம். பணிய-தாழு மாறு. ஓங்கு-உயரமாக விளங்கும். பெரு-பெரிய. விமானம் தன்னை-விமானத்தை. தன்.அசைநிலை. வலம் கொண்டுவலமாக வந்து. தொழுதுவிழுந்து- தரையில் விழுந்து அந்தப் பிரமபுரீசரை வணங்கி விட்டு. எழுந்த-பிறகு தரையி: லிருந்து எழுந்து நின்று கொண்டிருந்த, எல்லை-சமயத்தில்.. ச்:சந்தி. சண்பை- சண்டையாகிய சீகாழியில். வரு-திருவவ. தாரம் செய்தருளும். பிள்ளையார்-ஆளுடைய பிள்ளையா