பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 317

ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அப்பர்-அப்பர் சுவாமிகளே விளி. உங்கள்-தங்களுடைய. தம்பிரானாரை. தலைவராகிய வீரட்டானேசுவரரை, நீர்-தேவரீர். பாடீர். பாடியருள்வீராக. என்ன-என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. க்:சந்தி. கண்-தம்முடைய கண்களி லிருந்து: ஒருமை பன்மை மயக்கம். பயிலும்-வழியும். புனல்-நீர். பொழிய-மழையைப் போலச் சொரிய. அரசும்திருநாவுக்கரசு நாயனாரும்; தின்னமயக்கம். வாய்மை. உண்மையாகிய, க்:சந்தி.கலை. அறுபத்து நான்குகலைகளை: ஒருமை பன்மை மயக்கம். அவை இன்ன என்பதை வேறோ ரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பயிலும். கற்கும். மொழி-சொற்கள்: ஒருமை பன்மை மயக்கம். பொழிய-மழையைப் போலச் சொரிய. க்:சந்தி, கசிந்துகசிவை அடைந்து. பாடி-ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி. இந்தப் பாடல் குளகம்.

திருவதிகை வீரட்டானத்தைப்பற்றிக் காந்தார பஞ்சமப் பண்ணில் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: -

  • முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்

வளைத்தெழு சடையினர் மழலை வீணையர் திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன் கிளைத்துழித் தோன்றிடும் செடில வாணிர, ' அந்த நாயனார் பாடியருளிய கொப்புளித்த திருநேரிசை ஒன்று வருமாறு: . . . . . . . " இரும்புகொப்புளித்த யானை

- ஈருரி போர்த்த ஈசன்

கரும்புகொப் புளித்த இன்சொற்

காரிகை பாகமாகச். சுரும்புகொப் புளித்த கங்கைத் -

துவலைநீர் சடையில் ஏற்ற