பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பெரிய புராண விளக்கம்-டு

சித்தநெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக் கரசுதிரு வுள்ளங் தன்னில் மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு

மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு விளம்புதலும் அவருமது மேவி நேர்வார். ” அத்தன்மையினில்-அந்த நட்பாகிய பான்மையோடு; உருபு மயக்கம். அர சும்-திருநாவுக்கரசு நாயனாரும்; திணை மயக்கம். பிள்ளையாரும்-ஆளுடைய பிள்ளையா ராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும். அளாவளா விய-ஒருவரோடு ஒருவர் அளவளாவியதால். மகிழ்ச்சிஉண்டான ஆனந்தம். அளவு-ஒர் அளவே. இலாத-இல்லாத, இடைக்குறை. சித்த தங்களுடைய திருவுள்ளங்களில்: ஒருமை பன்மை மயக்கம். நெகிழ்ச்சியினோடு-உருக்கத் தோடு. செல்லும்-அந்தத் திருமடத்தில் தங்கிக் கொண்டு வாழும். நாளில்-காலத்தில். திருநாவுக்கரசு-திருநாவுக் கரசு நாயனாருடைய திணை மயக்கம். திரு-அழகிய. உள் ளந்தன்னில் - திருவுள்ளத்தில் தன்: அசைநிலை. மைமையைப் போன்ற கரியநிறம். கரிய நிறம் என்றாலும் இங்கே நீல நிறத்தையே கொள்க. கருமையையும் நீலம் என்பது ஒரு மரபு; நீல நிறக் காக்கை' என வருதலைக் காண்க, த், சந்தி. தழையும்-தழைத்து ஒங்கும். மணி. நீல மணியைப் போன்ற. மிடற்றார்-திருக்கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமானார். பொன்னி-திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் பொன்னைக் கொழிக்கும். காவிரிஆறு, 'பொன்னி பொன் கொழிக்கும்” என வரு, வதைக் காண்க. நாட்டு-ஓடும் சோழ நாட்டில். மன்னியநிலைபெற்று விளங்கிய. தானங்கள்-சிவத்தலங்கள். எல். லாம்-எல்லாவற்றிற்கும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார். எழுந்தருளி. வணங்கி-அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டுஎழுந்தருளியிருக்கும்.சிவபெருமான்களிைங் பணிந்து.