பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பெரியபுராண விளக்கம்-ன்

லிருந்து வடகிழக்குத் திசையில் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. இது திருமகள் வழிபட்ட தலம். செந்தண்மா மலர்த் திருமகள் மருவும் செல்வத்தென்றிரு நின்றியூரானே.” என்று தேவாரத்தில் வருகிறதைக் காண்க. சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய அந்தப் பாசுரம் முழுவதும் வரு. tÐfrg) :

1 மோய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு துனக்கு ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி

ஓங்கும் நின்றியூர் என்றுணக் களிப்பப் பத்தி செய்தஅப் பரசி ராமற்குப் -

பாதம் காட்டிய நீதிகண் டடைந்நேன் இத்தர் வானவர் தானிவர் வணங்கும்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. ’’ இந்த ஊரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு :

அஞ்சியாகிலும் அன்புபட் டாகிலும் நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே." திருநனி பள்ளி: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம், இங்கேகோயில்கொண்டிருப்பவர் நற்றுணையப்பர், அம்பிகை யின் திரு நாமங்கள் பர்வத ராஜபுத்திரி, மலையான் மடந்தை என்பவை. இதற்கு இப்போது வழங்கும் பெயர் புஞ்சை என்பது. இது மாயூரத்திற்கு வடகிழக்குத் திசையில் எட்டு மைல் தூரத்தில் உள்ளது. திருஞானசம்பந்த மூர்த்தி: நாயனாருடைய அன்னையாராகிய பகவதியார் திருவவ

தாரம் செய்தருளிய தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றிச் கந்த முர்த்தி நாயனார் பாடியருளிய ஒருபாசுரம் வருமாறு: