பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 33

திருவவதாரம் செய்தருளி வரும் திருமணத்தைப் புரிந்த மாதினியார் என்னும் பெண்மணியாருடைய அழகிய வயிற் றில் மலர்ச்சியைப் பெற்று செந்தாமரை மலர்களில் உள்ள வரிசையாகிய இதழ்களினுடைய உள்ளிடத்தில் விளங்கு மாறு திருவவதாரம் புரிந்தருளி வரும் திருமகளைப் போன்ற திலகவதியார் என்னும் பெண்மணியார் திருவவதாரம் செய்தருளினார். பாடல் வருமாறு:

புகழனார் தமக்குரிமைப்

பொருவில்குலக் குடியின்கண் மகிழவரு மணம்புணர்ந்த

மாதினியார் மணிவயிற்றில் நிகழும்மலர்ச் செங்கமல

நிரையிதழின் அகவயினில் திகழவரும் திருவனைய

திலகவதி யார்பிறந்தார்.' புகழனார் தமக்கு-அந்தப் புகழனாருக்கு. தம்:அசை நிலை. உரிமை-உரிமையை உடையதாகிய, ப்:சந்தி: பொருஒப்பு. இல்-இல்லாத கடைக்குறை. குல்-குலமாகிய, க்:சந்தி. குடியின்கண்-குடும்பத்தில். மகிழ-மகிழ்ச்சியைத் தம்முடைய தந்தையும் அன்னையும் அடையுமாறு. வரு-திருவவதாரம் புரிந்தருளி வரும். மணம்-திருமணத்தை. புணர்ந்த-புரிந்த, மாதினியார்-மாதினியார் என்னும் அன்னையாருடைய, மணி வயிற்றில்-அழகிய வயிற்றில், நிகழும்-மலர்ச்சியைப் பெற்று இருக்கும். மலர்ச் செங்கமல-செந்தாமரை மலர்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். திரை-வரிசையாகிய. இதழின்-இதழ்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். அகவயினில்-உள்ளிடத்தில், திகழ்-விளங்குமாறு. வரும்-திரு வவதாரம் புரிந்தருவி வரும். திரு-திருமகளை. அணையபோன்ற திலகவதியார். திலகவதியார் என்னும் திருநாமத் தைப் பெற்ற பெண்கணியார் பிறந்தார்-திருவவதாரம் செய்ததளினார். . . . . . - . . . .