பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பெரிய புராண விளக்கம்-5

பந்தத்தால் வந்தெப்பால் பயின்று நின்றவும்பரப்

பாலேசேர் வாயேனோர் கான்பயில் கணமுனிவர் 3\. களும் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கைதன்னொடும் சேர்வார் நாள் நாள் நீண்கயிலைத் திகழ்தரு பரிச

. தெலாம். சந்தித்தே இந்தப்பார் சனங்கள் நின்று தங்கணாற்

றாமே காணாவாழ்வா ரத்தகவு செய்தவன்இடம் கந்தத்தால் எண் டிக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்

காடார் பூவார்சீர்மேவும் கழுமல வளநகரே. ' பிறகு வரும் 192-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அலைகளை வீசும் தன்னிடம் ஒடும் நீர் மாணிக்கங்' களைச் சிதறி விழுமாறு புரியும் அலைகளில் உள்ள புனலைப் பெற்ற பொன் கொழிக்கும் காவிரி ஆற்றினுடைய தென் கரையில் விளங்கும் திருவிடை மருதுாருக்கு அந்தத்திருநாவுக் கரசு நாயனார் எழுந்தருளி அட்ைந்து பக்தியோடு மான் குட்டி தங்கியுள்ள திருக்கரத்தைப் பெற்றவராகிய மகாலிங்க மூர்த்தியைப் பணிந்துவிட்டு அந்தத் திருவிடை மருதூரில் தங்கிக் கொண்டிருந்து சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ்ப் பாசுரங்கள் அடங்கிய, மாலைகளாகிய திருப்பதிகங்கள் பலவற்றை அந்த மகா லிங்க மூர்த்தி மகிழ்ச்சியை அடைந்தருளுமாறு அணிந்து விட்டு, புள்ளிகளைப் பெற்ற் பாம்புகள்ை அணிந்த்வராகிய நாகநாதேசுவரரை அவர் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும், திருநாகேச்சுரத்தில் அந்த சசுவரரை வாழ்த்தி வண்ங்கிவிட்டு அந்த நாயனார் அருமையாக விளங்கும் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை அணிந்து விட்டு மேலே எழுந்தருளி செறிந்த நறுமணம் கமழும் நல்ல மலர்கள் மலர்ந்திருக்கும். பலவகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில்