பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - பெரிய புராண விளக்கம்- 6.

இருந்த. க்:சந்தி. காதல்-விருப்பம். குலவும்-பொருந்தி, யிருக்கும். பூசை-பூசையை, கொண்டருளும்-ஏற்றுக் கொண்டு தம்முடைய திருவருளை வழங்கும். ன்ன்றும். என்றைக்கும். இனிய-தன்னுடைய பக்தர்களுக்கு னிய வனான வினையாலனையும் பெயர். பெருமானை-சிவ. பெருமானாகிய அந்தச் சிவக்கொழுந்தீசுவரனை. இறைஞ்சிஅந்த நாயனார் வணங்கி விட்டு. இயல்பில்-தம்முடைய இயல்புக்கு ஏற்ற: உருபு மய்க்கம். திருப்பணிகள்-உழவாரப் பணியையும் வேறு பல திருப்பணிகளையும். முன்றில்-அந்த ஆலயத்தினுடைய முற்றத்தை. முன்றில்-இல்முன் பின் முன்னாகத் தொக்க தொகை. அணைந்து-சேர்வதை; வினையாலனையும் பெயர். செய்து-புரிந்தருளி. தமிழ் மொழி.செந்தமிழ் மொழியில் அமைந்த, மாலைகளும். மாலைகளாகிய பல திருப்பதிகங்களையும். சாத்துவார். அந்தச் சிவக்கொழுந்தீசுவரருக்கு அந்த நாயன்ார். அணிப வரானார். -

பிறகு உள்ள 194 ஆம் கவியின் கருத்து வருமாறு:

கோவாய் முடுகி.' எனத் தொடங்கி, சுற்றம் வந்து குமைப்பதன்முன், பூவா ரடிகள் என்தலை மேற் பொறித்து வைப்பாய்' என்ற வார்த்தைகளை வைத்து ஒரு திருப்பதி கத்தை அந்த நாயனார் பாடியருளி தம்முடைய திருநாவில் நிறைந்த அந்தத் திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடி யருளியவுடன் அவருடைய தலைவனாகிய சிவக்கொழுந்தீசு வரனும், நீ திருநல்லூருக்கு வருவாயாக. வருவாயாக' எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய அந்தச் சிவக்கொழுந் திசுவரரை வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் பணிந்து விட்டு மகிழ்ச்சியை அடைந்து.' பாடல் வருமாறு :

" கோவாய் முடுகி' என்றெடுத்துக்

  • கூற்றம் வந்து குனமப்பதன்முன். பூவார் அடிகள் என்தலைமேற்.

பொறித்து வைப்பாய். எனப்புகன்று