பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 : பெரிய புராண விளக்கம்-8

உயிரைப் பெற்று விழித்துக் கொண்டு தரையிலிருந்து எழுந்து அமர்ந்தான். பாடல் வருமாறு: அன்றவர்கள் மறைத்தனுக்

களவிறந்த கருணையராய்க் கொன்றைநறுஞ் சடையார்தம்

கோயிலின்முன் கொணர்வித்தே ஒன்றுகொலாம் எனப்பதிகம்

எடுத்துடையான் சீர்பாடப் பின்றைவிடம் போய்நீங்கிப் -

பிள்ளை உணர்ந் தெழுந்திருந்தான். ' அன்று-அன்றைக்கு. அவர்கள்-அந்த அப்பூதியடிகள் நாயனாரும் அவருடைய தர்ம பத்தினியாரும். மறைத்த னுக்கு தங்களுடைய மூத்த புதல்வனாகிய திருநாவுக்கரசினு டைய பிணத்தை ஒரு மறைவான இடத்தில் ஒளித்து விட்ட தற்கு. அளவு இறந்த-அளவைக் கடந்து. கருணையராய்கருணையைப் பெற்றவராகி. க்:சந்தி. கொன்றை-கொன் றைமலர் மாலையை ஆகு பெயர் நறும்-அணிந்ததனால் நறுமணம் கமழும். சடையார் தம்-சடாபாரத்தைத் தம்மு Gծ)L-ն.1 தலையின் மேற் பெற்றவராகிய வீரட்டானேசுவரர். தம்:அசை நிலை. கோயிலின் முன்-ஆலயத்துக்கு முன்னால்: கொணர்வித்து-அந்தப் பிணத்தைக் கொண்டு வரச் செய்து. ஏ:அசை நிலை. ஒன்றுகொலாம் என-ஒன்று கொலாம் என்று. என: இடைக்குறை. ப்:சந்தி. பதிகம்-ஒரு திருப்பதி கத்தை. எடுத்து-தொடங்கி, உடையான்-தம்மை அடிமை யாக உடையவனாகிய வீரட்டானேசுவரனுடைய. சீர்-சீர்த் தியை. பாட அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருள. ப்:சந்தி. பின்றை-அவர் அவ்வாறு, பாடியருளிய பிறகு. விடம்-தன்னை நாகப்பாம்பு கடித்ததனால் தன்னுடைய தலைக்கு மேல் ஏறிய நஞ்சு.போய்-சென்று. நீங்கி-அகன்று. ப்சந்தி. பிள்ளை-அந்தச் சிறுவனாகிய திருநாவுக்கரசு.