பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 63. தவத்தை. புரிந்து-புரிந்துகொண்டு. திலகவதியார்-அந்தத் திலகவதியார். இருந்தார்.வாழ்ந்து கொண்டிருந்தார்.

பிறகு உள்ள 35-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தம்முடைய குற்றம் ஒன்றும் இல்லாத திருவுள்ளத்தில் உண்டாகியிருந்த துயரம் போவதற்காக அந்த மருணிக்கி யார் நிறைந்து இந்தப் பாரத தேசத்தில் சைவ சமயமாகிய வழி நிலைத்து நில்லாமையைப் பார்த்து முப்பத்திரண்டு தருமங்களைப் புரிபவராகி இந்த மண்ணுலகத்தின் மேல் தம்முடைய புகழ் விளங்குமாறு இரவலர்களுக்குச் செல் வத்தை வழங்கியும் கருணையால் குற்றம் இல்லாத பல தருமச்சாலைகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் கட்டி வைப்பவரானார். பாடல் வருமாறு:

மாசில்மனத் துயரொழிய

மருணிக்கி யார்கிரம்பித் தேசநெறி நிலையாமை

கண்டறங்கள் செய்வாராய்க் காசினிமேற் புகழ்விளங்க

நிதியளித்தும் கருணையினால் ஆசில்அறச் சாலைகளும்

தண்ணீர்ப்பக் தரும் அமைப்பார். ’’ மாசு-குற்றம் ஒன்றும். இல்-இல்லாத கடை க்குறை. மன-தம்முடைய திருவுள்ளத்தில் உண்டாகியிருந்த த்:சந்தி: துயர்-துயரம் , ஒழிய - போவதற்காக, மருணிக்கியார்- - அந்த ம்ருணிக்கியர் நிரம்பி-நிறைந்து. த்:சந்தி. தேசம் இந்தப் பாரததேசத்தில். நெறி-சைவ சமயமாகிய வழி: நிலையாமை-நிலைத்து நில்லாமையை. கண்டு-பார்த்து. . அறங்கள்-முப்பத்திரண்டு தருமங்களையும்; அவை' இன்ன, என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக்கண் டுணர்க. செய்வாராய் - புரிந்தருளுபவராகிய, க்:சந்திகாசினிமேல்-இந்த மண்ணுலகத்தின் மேல். புகழ்-த'