பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6g - - பெரிய புராண விளக்கம்-6

முற்கிறச்சம். வல்-வலிமையைப்பெற்ற, அமணர்-சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-அந்த மருணிக்கியா ருடைய பக்கத்தை. அணைந்து-அடைந்து. மற்று:அசை நிலை. அவர்க்கு-அந்த மருணிக்கியாருக்கு. வீடு-முக்தியை, அறியும்.தெரிந்து கொள்ளும். நெறி-வழி. இதுவே-இந்தச் சமணசமயந்தான். என- என்று இடைக்குறை. மெய்போல், உண்மையைப்போல. தங்களுடன்-தங்களோடு. கூடவரும். கூட எழுந்தருளும். உணர்வு-உணர்ச்சியை கொள-கொள் ளும் வண்ணம்; இடைக்குறை. க்:சந்தி. குறி-பொய்ந்நூல் கள்; ஒருமை பன்மை மயக்கம். பலவும்-பலவற்றையும். கொளுவினார்-மருணிக்கியாருடைய திருவுள்ளம் கொள்ளு மாறு அந்தச் சமணர்கள் கற்பித்தார்கள் ஒருமை பன்மை மயக்கம். .

அடுத்து உள்ள 39-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: அந்தச் சமண் பள்ளியில் அந்த மருணிக்கியாரும் சமண சமயத்தில் உள்ள அருமையாக இருக்கும் கலைகளைக் கூறும் சாத்திரங்களாக உள்ள எல்லாவற்றையும் தம்முடைய திரு வுள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சி உண்டாகுமாறு கற்றுப் பழகி அந்தச் சமண சமய வழியில் தம்முடைய அறிவு சிறப் பாக அமைய பரிசுத்தமாகிய முழுமையாக உள்ள உடம்பு களைப் பெற்ற சமணர்கள் அந்த மருணிக்கியாரைச் சுற்றிக் கொண்டு மகிழ்ச்சியை அடைபவர்களாகி அந்த மருணிக்கி யாருக்குத் தங்களுக்குள் மேலாக விளங்கும் தருமசேனர் என்னும் திருநாமத்தை வழங்கினார்கள். பாடல் வருமாறு:

அங்கவரும் அமண்சமயத் .

தருங்கலைநூ லானவெலாம் பொங்கும்.உணர் வுறப்பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்பத் துங்கமுழு உடற்சமணர்

சூழ்ந்துமகிழ் வார்.அவர்க்குத்