பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருநாவுக்கரசு நாயனார் புராணம் 79 புரிய வேண்டும்' என்று பல தடவைகளும்விண்ணப்பத்தைப் புரிந்தார். பாடல் வருமாறு:

" தூண்டுதவ விளக்கனையார்

சுடரொளியைத் தொழு,"தென்னை ஆண்டருளும் நீராகில்

அடியேன்யின் வந்தவனை ஈண்டுவினைப் பரசமயக்

குழிகின்றும் எடுத்தருள வேண்டும்’ எனப் பலமுறையும்

விண்ணப்பம் செய்தனரால்.” துாண்டு-அவ்வாறு துயரத்தால் வருத்தத்தை அடைந்த வரும் தூண்டுகின்ற. தவ-தவத்தைப் புரிந்த விளக்கு - திரு விளக்கை. அனையார்-போன்றவராகிய திலகவதி யார் . சுடர்-சுடரை வீசும். ஒளியை.சோதியாகிய வீரட்டானேசு வரரை. த்: சந்தி. தொழுது-வணங்கி விட்டு. என்னை-அடி யேனை. ஆண்டருளும் நீராகில்-தேவரீர் ஆளாகக் கொண்டு திருவருளை வழங்குபவரானால், அடியேன்-அடியேனுக்கு. பின்-பின்னால், வந்தவனை-பிறந்த தம்பியாகிய மருணிக் கியை. ஈண்டு-தொகுதியாகக் கூடியிருக்கும். இந்தஇடத்தில்’ எனலும் ஆம். வினை-தீய வினைகளாகிய பாவங்களைப் புரியும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பரசமயவேறு சமயமாகிய ச ம ன சமயத்தைச் ேச ர் ந் த சமணர்களாகிய, தி ைண ம யக் க ம். க்சந்தி. கு ழி நின்றும்-குழியிலிருந்தும். எடுத்தருள வேண்டும்-எடுத்துத் தேவரீர் திருவருளை வழங்க வேண்டும். என-என்று; இடைக் குறை. ப்:சந்தி. பல முறையும்-பல தடவைகளிலும்; ஒருமை பன்மை மயக்கம். விண்ணப்பம்-விண்ணப்பத்தை. செய்தனர்

செய்து கொண்டார். ஆல்:ஈற்றசை நிலை.

பெண்மணிக்கு விளக்கு உவமை : விளக்கொளியாகிய மின் கொடியாளை." என்று திருமூலரும், அணி விளக் கென்ன விழவு கொண்டெழும் பேதையருடன்." செத்வர்