பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 89.

அடுத்து வரும் 52-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்த மருணிக்கியாருடைய வருத்தத்தை அடைந்த நிலையைப் பார்த்ததற்குப் பிறகு சமணர்களாகிய இழிந்த செயல்களையும் இழிவான ஒழுக்கத்தையும் கொண்டவர்கள் பல பேர்களும் கூடிக் கொண்டு, 'இவரைக் கவர்ந்திருக் கின்ற நஞ்சைப் போல முன்பு நாம் பார்த்து அறியாத கொடுமையாக இருக்கும் இந்தச் சூலை நோய் இந்த மருணிக்கியாருக்கு வந்து விட்டது; இனிமேல் செங்வதற் குரிய செயல் ஏது இருக்கிறது?" என அந்தச் சமணர்கள் வருத்தத்தை அடைந்தார்கள்; அவர்கள் தவம் என்று கூறிக் கொண்டு தீய வினைகளாகிய பாவங்களைப் பெருகலாகச் செய்து சார்பு அல்லாத சமண சமய வழியைச் சார்ந்து இருப்பவர்கள். பாடல் வருமாறு:

அவர்நிலைமை கண்டதற்பின் அமண்கையர் பலர்ஈண்டிக் ‘கவர்கின்ற விடம்போல்முன்

கண்டறியாக் கொடும்.சூலை இவர்த்மக்கு வந்ததினி

யாதுசெயல்?’ என்றழிந்தார் தவமென்று வினைபெருக்கிச் சார்பல்லா நெறிசார்வார்.' அவர்-அந்த மருணிக்கியாருடைய. நிலைமை-வகுத் தத்தை அடைந்த நிலையை. கண்டதற்பின்-பார்த்ததற்குப் பிறகு. அமண்-சமணர்களாகிய, திண்ைமயக்கம். கையர்இழிந்த செயல்களையும் இழிவான ஒழுக்கத்தையும் கொண் டவர்கள் ஒருமை பன்மை மயக்கம். பலர்-பல பேர்களும். ஈண்டி-கூடிக் கொண்டு. க்சந்தி. கவர்கின்ற-இவரைக் கவர்ந்திருக்கின்ற விடம் போல்-நஞ்சைப் போல. முன்-முன் , னால், கண்டு அறியர்-நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளாத க்:சந்தி. கொடும்-கொடுமையாக இருக்கும். சூலை-இந்தச்