4 பெரிய புராண விளக்கம்-7 இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய ஒரு திருநேரிசை வருமாறு: 3. அங்கதி ரோனவனை அண்ணலாக் கரு தவேண்டா வெங்கதி ரோன்வழியே போவதற் கமைந்துகொள்மின் அங்கதி ரோனவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி செங்கதி ரோன்வணங்கும் திருச்சோற்றுத் துறைய னாரே." இந்தத் தலம் திருச்சத்துறை என்று இக்காலத்தில் வழங்கும். இந்தத் தலத்தைப் பற்றிக் கெளசிகப் பண்ணில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: அழல்நீர் ஒழுகி அனைய சடையும் உழைபீர் உரியும் உடையான் இடமாம் கழைநீர் முத்தும் கனகக் குவையும் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.' அடுத்து வரும் 212-ஆம் கவியின் கருத்து வருமாறு: தங்களுடைய தலைகளைத் தூக்கிக் கொண்டு நிமிர்ந்துபார்க்கும் பாம்புகளையும், இளம் பருவத்தைப்பெற் றிருக்கும் பிறைச் சந்திரனையும் தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் அணிந்துள்ளவராகிய ஆபத்சகாயேசு வரரை எல்லாப் பக்கங்களிலும் இருக்கும் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கும் திருப் பணியை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம் மேற் கொண் டருளி திருச்சோற்றுத் துறை முதலாக உள்ள சிவத்தலங் களுக்கு அந்த நாயனார் எழுந்தருளிப் பக்தி செய்து தழும்பு ஏறியது போல அமைந்திருக்கும் பக்தியோடு எழுந்தருளிச் சிவத்தலங்கள் பலவற்றிலும் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் சிவபெருமான்களைப் புகழ்ந்து பாடியருளி நீர் வளச் செழுமையையும், நில வளச் செழும்ையையும், செல்வ வளச் செழுமையையும், திருமாளிகை வளச் செழு மையையும், ஆலயங்களின் வளச் செழுமையையும், நன் மக்களாகிய வளச் செழுமையையும், கற்புடை மங்கைமார்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
