பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 9% கூட்டம் இரண்டு பக்கங்களிலும் சேர்ந்து கொண்டு வந்த சமயத்தில் இரண்டு சந்திரர்கள் எழும் சமுத்திரங்கள் ஒன் றாகச் சேர்ந்து அடைந்தன என்பதைப் போல அமைந்திருந் தன. பாடல் வருமாறு: - கரண்டம்மலி தடம் பொய்கைக் காழியர்கோன் எதிரணையும் காதல்கேட்டு வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்; திரண்டுவரும் திருநீற்றுத் தொண்டர்குழாம் இருதிறமும் சேர்ந்த போதில்" இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி அணைந்தனபோல் இசைந்த அன்றே. " கரண்டம்-நீர்க் காக்கைகள் ஒருமை பன்மை மயக்கம். மலி-மிகுதியாக உள்ள, தடம்-தடாகத்தையும். பொய்கைமனிதர் ஆக்காத நீர் நிலையையும் கொண்ட க்சந்தி. காழி யர். காழியில் வாழும்மக்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். கோன்-அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எதிர்-தமக்கு எதிரில், அணையும்-எழுந்தருளும், காதல். விருப்பத்தை உண்டாக்கும் செய்தியை ஆகுபெயர். கேட்டுகேள்விப்பட்டருளி. வரன்று-வாரிக்கொண்டு வந்து. மணிமாணிக்கங்களை; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புனல் நீர் நிரம்பிய ஆறு ஆகுபெயர். புகலூர்-ஒடும் திருப் புகலூரை, நோக்கி-அடைவதற்கு எண்ணி. வரும்-எழுந் தருளும். வாகீசர்-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து வந்தார்-அந்தத் திரும் புகலூருக்கு எழுந்தருளினார். திரண்டுவரும்-கூட்டமாகக் கூடிக் கொண்டுவரும். திருநீற்று-விபூதியைத் தங்களுடைய திருமேனிகள் முழுவதும் பூசிக்கொண்ட த்:சந்தி. தொண்; டர்-திருத்தொண்டர்களினுடைய ஒருமை பன்மைமயக்கம்.