திருநாவுக்கரசு நாயனார் புராணம் 101 திருநாவுக் கரசர் எதிர்சென்றிறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மைப் பெருஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர்வணங்கி, அப்பரே, நீர் வரும்நாளில் திருவாரூர் நிகழ்பெருமை வகுத்துரைப்பீர்' என்று கூற அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார். ' திருநாவுக்கரசர்-அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார். எதிர்-திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில், சென்று-எழுந்தருளி. இறைஞ்ச-அந்த நாயனாரை வணங்க, ச்சந்தி. சிரபுரத்து-சிரபுரமாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய, த்:சந்தி. தெய்வ-தெய்வத் தன்மையைப் பெற்ற வாய்மை - திருவாயினுடைய தன்மையையும். ப்: சந்தி. பெரு-பெருமையையும் பெற்ற. ஞானசம்பந்தப் பிள்ளையார்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாராகிய ஆண் சிறுவர். எதிர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில், வணங்கி-பணிந்து விட்டு. அப்பரே-அப்பர் சுவாமி களே. நீர்-தேவரீர். வரும்-எழுந்தருளும். நாளில்-தினத் தில். திருவாரூர்-அந்தத் திருவாரூரில். நிகழ் - நடை பெற்ற, பெருமை-பெருமையை. வகுத்து-வகைப்படுத்தி. உரைப்பீர்-திருவாய் மலர்ந்தருளிச் செய்வீர்களாக. என்று. என கூற-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச்செய்ய.அரு.அருமையாகிய, நாமத்துசிவபெருமானுடைய திருநாமமாகிய அஞ்சு எழுத்தும்ந, ம, சி. வா. ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரத்தை எழுத்து:ஒருமை பன்மை மயக்கம். பயில்உச்சரித்துப் பழகிய வாய்மை-திருவாயின் தன்மையைப் பெற்ற, அவரும்- அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும். எதிர்திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில். அருளிச் செய்தார்-திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
