பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருநாவுக்கரசு நாயனார் புராணம் 103 நாயனார் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம், முத்து விதமான மணிப் பொற்கவரி மொழி. முத்துவிதான மணிப் பொற்கவரி, என்று தொடங்கித் திருவாய் மலர்ந் தருளிச் செய்யும், மாலை-மாலையாகிய ஒரு திருப்பதி கத்தை. அருள்செய்தார்-திருவாய் மலர்ந்தருளிச் செய் தார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட திரு ஆரூர்த் திருவாதி ரைத் திருப்பதிகம் குறிஞ்சிப் பண் அமைந்தது. அதில் வரும் முதற் பாசுரம்ே இந்தப் பாடலில் குறிப்பிட் டபாசுரம். அது வருமாறு: முத்து விதான மணிப்பொற் கவரி முறை யாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப் பின் னே வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். ' இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு: . பாரூர் பெளவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச் சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந் தோரூர் ஒழியா தலகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரு ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம். ' பிறகு வரும் 236-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தச் சொற்கள் அடங்கிய மாலையாகிய செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்த