பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 5 களாகிய வளச் செழுமையையும், சமயத்தில் உதவி புரியும் சுற்றத்தார்களாகிய வளச் செழுமையையும், இடித்து உரைக்கும் நண்பர்களாகிய வளச் செழுமையையும் வேறு வளங்களாகிய செழுமைகளையும் பெற்ற திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவராகிய அந்த ஆபத்சகாயேசு வரருடைய ஆலயத்தில், அந்த நாயனார் உழவாரத் தொண்டினையும் வேறு பல திருத்தொண்டுகளையும் புரிந்து கொண்டு அந்தத் திருப்பழனத்தில் தங்கிக் கொண்டிருந் தார். பாடல் வருமாறு: எழும்பணியும் இளம்பிறையும் * , அணிந்தவரை எம்மருங்கும் தொழும்பணிமேற் கொண்டருளித் திருச்சோற்றுத் துறைமுதலாத் தழும்புறுகேண் மையில்கண்ணித் தானங்கள் பலபாடிச் செழும்பழனத் திறைகோயில் திருத்தொண்டு செய்திருந்தார். ' எழும்-தங்களுடைய தலைகளைத் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும். பணியும்-பாம்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். இளம்-இளம் பருவத்தைப் பெற்ற. பிறையும்-மூன்றாம் பிறைச்சந்திரனையும். அணிந்தவரைதம்முடைய தலையில் உள்ள சடாபாரத்தில் புனைந்து கொண்டுள்ளவராகிய ஆபத்சகாயேசுவரரை. எம்மருங்கும்எல்லாப் பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். தொழும்இருக்கும் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மான்களை வணங்கும். பணி-திருப்பணியை. மேற் கொண் டருளி-திருநாவுக்கரசு நாயனார் தம்மேற் கொண்டருளி. த்:சந்தி. திருச்சோற்றுத் துறை முதலா-திருச்சோற்றுத் துறை முதலாக உள்ள. த்:சந்தி. தழும்பு-சிலத்தலங்களுக்கு அந்த நாயனார் எழுந்தருளிப் பக்தி செய்து தழும்பு ஏறியது போல. உறு-அமைந்திருக்கும். கேண்மையில்.பக்தியோடு,