திருநாவுக்கரசு நாயனார் புராணம் 107 னாரைப் பணியும் பொருட்டு. ச்:சந்தி. செந்தாமரை -செந். தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம் ஒடை-நீரோடையைப் பெற்று விளங்கும். ச்: சந்தி. சண் பையர்-சண்பையாகிய சீகாழியில் வாழும் மக்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். நாதன்தான்-தலைவனாகிய திருஞான சம்பந்தன். தான்.அசைநிலை, ஏக-எழுந்தருள. நா-தம்முடைய திருநாக்கில். மரு-எழுகின்ற சொல்லின்சொற்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். நாதரும்-தலைவ ராகிய திருநாவுக்கரசு நாயனாரும். ஆர்வத்தொடு. பேராவலோடு. பூ-மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம், மலர்-மலர்ந்து. வாச-நறுமணம் கமழும், த்:சந்தி. தண். குளிர்ச்சியைப் பெற்ற. பணை-வயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்த வயல்களாவன: சம்பா நெற்பயிர்கள் விளை யும் வயல், குறுவை நெற்பயிர்கள் விளையும் வயல், கரும்புச் செடிகள் விளைந்து நிற்கும் வயல் முதலிய பல வயல்களும். சூழும்-சுற்றியிருக்கும். பு க"லூ ரி ல் - திருப்புகலூருக்குள். புக்கார்-நுழைந்தார். - பிறகு வரும் 238-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : அந்த அழகிய பழமையான சிவத்தலமாகிய திருப்புக லூரை அடைந்த திருநாவுக்கரசு நாயனாரும் தம்முடைய திருவுள்ளத்தில் நிரம்பியிருந்தே பக்தி தெவிட்டிப் போகும் தெளிவாகிய நீர் வெள்ளத்தைப் போல உண்டாகித் தரையில் வழிந்து இறங்கும் தாரை தாரையாகத் தம்முடைய விழிகள் சொரியும் நீர் தம்முடைய திருமேனி முழுவதும் நிரம்பி வழியப் பசுமையான தலையைப் பெற்ற நாசப்பாம்பு களாகிய அணிகலன்களை அணிபவராகிய அக்கினிசுவரரை அந்த நாயனார் ணங்கலானார். பாடல் வருமாறு:
- அத்திரு மூதூர் மேவிய
நாவுக் கரசும்தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்