பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - பெரிய புராண விளக்கம்-7 மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப் பைந்தலை காகப் பூண் அணி வாரைப் பணிவுற்றார்.' அத் திரு.அந்த அழகிய. மூதூர்-பழமையான சிவத்தல மாகிய திருப்புகலூருக்கு. மேவிய-எழுந்தருளிய நாவுக் கரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்; திணை மயக்கம். தம்" தம்முடைய. சித்தம்-திருவுள்ளத்தில் நிறைந்தே-நிரம்பி யிருந்தே. அன்பு-பக்தி, தெவிட்டும்-தெவிட்டிப் போகும் அளவுக்கு. தெளி-தெளிவாகிய, வெள்ளம்-நீர் வெள்ளத் தைப் போல, மொய்த்து-உண்டாகி. இழி-தரையில் வழிந்து இறங்கும். தாரை-தாரை தாரையாக. தாரை-நீர் ஒழுக்கு. க்சந்தி. கண்-தம்முடைய விழிகள்; ஒருமை. பன்மை மயக்கம், பொழி-சொரியும். நீர்-புனல். மெய்தம்முடைய திருமேனி. ம்:சந்தி. முழுது-முழுவதும். ஆரநிரம்பி வழிய. ப்:சந்தி. பைம்-பசுமையாக இருக்கும். தலை-தலையைப் பெற்ற, நாக-நாகப் பாம்புகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பூண்-அணிகலன்களை: ஒருமை பன்மை மயக்கம். அணிவாரை-புனைபவராகிய அக்கினிசுவரரை. ப்:சந் தி. பணிவுற்றார்-அந்தத் திரு. நாவுக்கரசு நாயனார் வணங்கலானார். பிறகு உள்ள 239-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தேவர்களுடைய தலைவனை, தெற்குத் திசையில் விளங்கும் திருப்புகலூரில் நிலைபெற்று விளங்கிய தேனைப் போல இனிக்கும் அக்கினீசுவரரை பாசுரங்களாக நடக்கும் மாலையாகிய செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதி கத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி பக்தி யோடு அமைந்த ஒவ்வொரு பூஜாகாலத்திலும் விருப்பத் தோடு திருக்கோயிலுக்கு அந்த நாயனார் எழுந்தருளி அந்த அக்கினீசுவரரைத் தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டு, இடை விடுதல் இடையறாத உழவாரத் திருப்பணியையும் வேறு