பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -- 109 திருப்பணிகளையும் புரிந்து கொண்டு அந்தத் திருப்புகலூரில் தங்குகிறவரானார். பாடல் வருமாறு : - " தேவர். பிரானைத் தென்புக லூர்மே வியதேனைப் பாவியல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு மேவிய காலம் தோறும் விருப்பிற் கும்பிட்டே ஒவுதல் ஓவு திருப்பணி செய்தங் குறைகின்றார் ’’ தேவர்-தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பிரானை-தலைவனை. த்:சந்தி. தென்-தெற்குத் திசையில் விளங்கும். புகலூர்-திருப்புகலூரில். மேவிய-விரும்பி எழுந் தருளிய. தேனை-தேனைப்போல இனிக்கும் அக்கினிக வரரை; உவம ஆகுபெயர். ப்:சந்தி. பா-பாசுரங்களாக; ஒருமை பன்மை மயக்கம். இயல்-நடக்கும். மாலை-மாலை யாகிய, ச்.சந்தி. செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, ஒரு திருப்பதிகத்தை ஆகுபெயர். பாடி-அந்தத் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளி ப்:சந்தி. பரிவோடு.பக்தியோடு, மேவிய-அமைந்த. காலம்தோறும்-ஒவ்வொரு பூஜா காலத் திலும். இவை ஆறு காலங்கள். விருப்பில்-விருப்பத்தோடு; உருபு மயக்கம் கும்பிட்டு-திருக்கோயிலுக்கு அந்த நாய னார் எழுந்தருளி அந்த ஆக்கினிசுவரரைத் தம்முடைய திருக் கரங்களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டு. ஏ:அசைநிலை. ஒவுதல்-இடைவிடுதல். ஒவு-இடையறாத, திருப்பணி-உழவாரத் திருப்பணியையும் வேறு திருப்பணிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். செய்து-அந்த நாயனார் புரிந்து கொண்டு. அங்கு-அந்தத் திருப்புகலூரில். உறைகின்றார்-தங்குகிறவரானார். திருப் புகலூரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் இந்தளப் பண்ணில் அமைந்த ஒரு திருப்பதிகத்தையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்