பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 113 என் மாளிகைத் தேவரும், 'தேனே அமுதே என் று திரு கைத சதவரு மு -சித்தமே., 'பாலும் அமுதமும் தேனுமாய்.’’ என்று சேந்தனாரும், கன்னலே தேனே அமுதமே." எ ன் று கருவூர்த் தேவரும், தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக் கோனை.’ என்று கண்டராதித் தரும், தேனே அனையன் நம் தே வர் பிரானே.", 'வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை.”, . தேனார் பராபரம்., 'தேனுக்குள் இன்பம் செறிந்திருந் தாற் போல ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந்தானே. என்று திருமூலரும், "செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினை.” என்று நக்கீர தேவ நாயனாரும், அம்பலத்தே நின்று கூத்துகந்த தேனே.” என்று பட்டினத்துப் பிள்ளை யாரும், தேன்றலை ஆன்டா லதுகல தாலன்ன சீரனை.' என்று நம்பியாண்டார். நம்பியும், மன்றுள் ஆடும் மது." என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. - பிறகு உள்ள 240-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தத் திருநாவுக்கரசு நாயனார் சீர்த்தியை வழங்கும் திருச்செங்காட்டங் குடிக்கும், நெடுங்காலமாகப் புகழ்பெற்று விளங்கும் திருநள்ளாற்றுக்கும், மரங்கள் நிரம்ப வளர்ந்து நிற்கும் பூம்பொழில் சுற்றியிருக்கும் சாத்தமங்கைக்கும் எழுந்தருளி அங்கே விளங்கும் திருக்கோயிலாகிய அயவந்தி - யில் கச்சு விளங்கும் மென்மையான கொங்கைகளைப் பெற்ற மலர்க்கண் அம்மையைத் தன்னுடைய வாமபாகத்தில் எழுந் தருளச் செய்திருக்கும் அயவந்தீசுவரனை வணங்கிவிட்டுத் திருமருகலுக்கும் எழுந்தருளி தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்து பொங்கும் பக்தியினால் அந்தத் திருத்தலத்திற்கு எழுந்தருளி மாணிக்க வண்ணேசுவரரைப் பணிந்து அந்த நாயனார் பேரானந்தத்தை அடைந்தார். பாடல் வருமாறு: சீர்தரு செங்காட்டங் குடிடுேம் திருநள்ளா றார்தரு சோலைசூழ்தரு சாந்தை அயவந்தி தி-8 -