6 பெரிய புராண விளக்கம்-7 உருபு மயக்கம். நண்ணி-எழுந்தருளி, த்:சந்தி. தானங்கள்சிவத்தலங்கள். பல-பலவற்றிலும் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை; ஆகு பெயர். பாடி-அந்த நாயனார் புகழ்ந்து பாடியருளி. ச்:சந்தி. செழும்நீர் வளச் செழுமையையும், நில வளச் செழுமையையும், செல்வ வளச் செழுமையையும், திருமாளிகை வளச்செழுமை யையும், ஆலயங்களின் வளச் செழுமையையும், நன்மக்க ளாகிய வளச் செழுமையையும், கற்புடை மங்கைமார் களாகிய வளச் செழுமையையும், சமயத்தில் உதவி புரியும் சுற்றத்தார்களாகிய வளச் செழுமையையும், இடித்து உரைக்கும் நண்பர்களாகிய வளச் செழுமையையும், அறிவு டைச் சான்றோர்களாகிய வளச் செழுமையையும், பசுமாடு ஆளாகிய வளச் செழுமையையும், வேறு பலவகையாகிய வளச் செழுமைகளையும் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். பழனத்து-திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும். இறைஇறைவராகிய அந்த ஆபத்சகாயேசுவரருடைய கோயில்ஆலயத்தில். திருத்தொண்டு-அந்த நாயனார் உழவாரத் திருத்தொண்டினையும், வேறுபல திருத்தொண்டுகளையும்: ஒருமை பன்மை மயக்கம். செய்து-புரிந்து கொண்டு. இருந் தார்-அந்தத் திருப்பழனத்தில் தங்கிக் கொண்டிருந்தார். பிறகு வரும் 213-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பல தினங்கள் அந்தத் திருப்பழனத்தில் தங்கியிருந்து கொண்டு தம்முடைய தவிென் மேல் திருவடிகளை வைத்தருளிய திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் எழுந்த ஆலகால நஞ்சை விழுங்கிய நீலமணியைப் போன்ற கழுத்தை உடைய வராகிய அந்த ஆபத்சகாயேசுவரருடைய அழகிய செந் தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடி . களைத் தியானித்து சேல் மீன்கள் உலாவித் திரியும் நீர் ஒடும் பொன்னைக் கொழிக்கும் காவிரியாற்றினுடைய தெற்குக் கரைமேல் அந்த நாயனார் ஏறி மேலே எழுந்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
