114 பெரிய புராண விளக்கம்ட? வார்திகழ் மென்முலை யாளொருபாகன் திருமருகல் ஏர்தரும் அன்பால் சென்றுவணங்கி இன்புற்றார்.' சீர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் சீர்த்தியை, தரு. வழங்கும். செங்காட்டங்குடி-திருச்செங்காட்டங்குடிக்கும். நீடும்.நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்கும். திருநள் ளாறு-திருநள்ளாற்றுக்கும். ஆர்தரு-பலவகையாகிய மரங்’ கள் நிரம் வளர்ந்து நிற்கும். அந்த மரங்களாவன: தேக்கு மரம், வேங்கை மரம், வாகை மரம், மருத மரம், பலவகை. யான வாழை மரங்கள், தென்னை மரம், பனை மரம், மா மரம், பலாமரம், கடப்ப மரம், தமால மரம், பவளமல்லிகை. மரம், வில்வ மரம், விளா மரம், புளிய மரம், பூவரச மரம். அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வாதநாராயண மரம். நெட்டிவிங்க மரம், அசோகமரம், சுரபுன்னை மரம், புன்னை மரம், சரக்கொன்றை மரம், புலி நகக் கொன்றை மரம் முதலியவை, சோலை-பூம் பொழில். சூழ்தரு-சுற்றி" யிருக்கும். சாந்தை-சாத்த மங்கைக்கும் எழுந்தருளி. அயவந்தி-அத்தத்தலத்தில் விளங்கும் திருக்கோயிலாகிய அயவந்தியில். வார்-கச்சு. திகழ்-விளங்கும். மென்-மென்மை யைப் பெற்ற. முலையாள்-கொங்கைகளைப் பெற்றவளாகிய மலர்க்கண் அம்மையை. முலை: ஒருமை பன்மை மயக்கம் ஒரு பாகன்-தன்னுடைய ஒப்பற்ற வாமபாகத்தில் எழுந்: தருளச் செய்திருக்கும் அயவந்தீசுவரனை வணங்கிவிட்டு. திருமருகல்-திருமருகலுக்கும் எழுந்தருளி. ஏர்தரும்-தம்மு. டைய திருவுள்ளத்தில் எழுந்து பொங்கும். அன்பால்-பக்தி யினால், சென்று-அந்தச் சிவத்தலத்திற்கு எழுந்தருளி. வணங்கி-மாணிக்க வண்ணேசுவரரைப் பணிந்து. இன்புற். றார்.அந்த நாயனார் பேரானந்தத்தை அடைந்தார். திருச்செங்காட்டங்குடி இது சோழநாட்டில் உள்ள சிவத் தலம்.இங்கே கோயில்கொண்டிருப்பவர் கணபதியீசுவரர். அம். பிகை திருக்குழல் நாயகி அம்மை. தலவிருட்சம் ஆத்தி மரம். இது திருக்கண்ணபுரத்திற் க் கிழக்குத் திசையில் ஒரு மைல்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
