பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 115 می தூரத்தில் உள்ளது. விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் என்னும் அசுரனைச் சங்காரம் செய்தருளிய தலம் இது. அந்த அசுரனுடைய இரத்தம் பெருகி ஒடிச் செங்காடாகி இருந்தமையினால் இந்தத் தலத்திற்குத் திருச்செங்காட்டங் குடி என்னும் பெயர் அமைந்தது. கஜமுகாசுரனைச்சங்காரம் செய்தருளிய பழி நீங்கும் பொருட்டு விநாயகப் பெருமான் கணபதியீசுவரரைப் பூசித்தார். அதனால் இங்கே உள்ள திருக்கோயிலுக்குக் கணபதிச்சுரம் என்னும் பெயர் வந்தது. சிறுத் தொண்ட நாயனார் தம்முடைய ஒரே புதல்வனாகிய சீராளனை வைரவ வேடம் பூண்டு எழுந்தருளிய சிவபெரு மானுக்கு வெட்டிக் கறியாக்கி வழங்கினார்; பிறகு அந்தக் கணபதீசுவரர் வழங்கிய திருவருளால் அந்தச் சிறுவன் பிழைத்து எழுந்தான். இந்தச் செய்தியை, . " பொடிநுகரும் சிறுத்தொண்டற் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய விற்றிருந்தான் . கணபதிச் சுரத்தானே.” என்று தேவாரத்தில் வருவதனாலும்,

ஏடள்ழ் அலங்கல் திண்டோள்

இபமுகத் தவுனன் மார்பில் நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப் பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய காடெனப் பெயர்பெற் றின்னும் காண்டக இருந்த தம்மா. ” மீண்டுசெங் காட்டில் ஒர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர் தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தர்பித் தேத்திப் பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்