பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 பெரிய புராண விளக்கம்-7 காண்டகும் அனைய தானம் கணபதிச்சுரம தென்பர். என்று கந்த புராணத்தில் வரும் செய்யுட்களாலும் அறிந்து கொள்ளலாம். . பழைய ஆத்திமரம் உற்சவர் சந்நிதிக்கு எதிரில் இருக் கிறது. சிறுத்தொண்ட நாயனார், அவருடைய புதல்வர், அவருடைய தர்மபத்தினியார் சந்தன நங்கையார், ஆகிய வர்களுடைய சிலை வடிவங்கள் திருக்கோயிற் பிராகாரத்தில் கிழக்குப் பக்கத்தில் உற்சவர் சந்நிதிக்கு எதிரில் உள்ளன. திருக்கோயிலுக்குத் தெற்குத் திசையில் சூரிய தீர்த்தம் இருக் கிறது. இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : - கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும் - தாராவே மடநாராய் தமியேற் கொன்றுரையிரே சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.”, திருநள்ளாறு : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம் இங்கே கோயில் கொண்டிருப்பவர் தர்ப்பாரண்யேசுவரர் அம்பிகை போக மார்த்த பூண்முலை அம்மை. தீர்த்தம் நள் திர்த்தம். இது காரைக்காலுக்கு மேற்குத் திசையில் மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. - - நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாறனே’’ என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. தர்ப்பாரண்யேசுவரர் என்னும் திருநாமத்துக்கு ஏற்றவாறு சிவலிங்கப் பெருமானு டைய திருவுருவம் தர்ப்பை புற்களின் கொழுந்துகள் சேர்ந்த தைப் போல விளங்குகிறது. திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் மதுரை மாநகரில் சமணர்களோடு வாதம் புரிந்தருளும் போது தியில் இட்டும் எரியாமல் இருந்த பச்சைத் திருப்பதி கத்தில் வரும் முதற் பாசுரம் பழந் தக்கராகத்தில் அமைந்தது. அந்தப் பாசுரம் வருமாறு : •