பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 117 " போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல் பரமேட்டி ஆகம் ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. * சனிபகவானுக்குச் சிறப்பாக அமைந்த திருக்கோயிலும் இந்தத் தலத்தில் உள்ளது. அந்தச் சனிபகவான் திருக்கோயி, லையே மக்கள் பகவான் கோயில் என்று வழங்குகிறார்கள். நளச்சக்கரவர்த்தி வழிபட்டுக் கலியின் பீடை நீங்கப் பெற்ற தலம் இது. பிராகாரத்தில் பெரிய வைரவருடைய விக்கிரகம் உள்ளது. இந்தத் தலத்திற்கு வடமேற்குத் திசை யில் நள தீர்த்தம் இருக்கிறது. விநாயகப் பெருமானுக்குச் சொர்ண விநாயகர் என்பது திருநாமம். இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : " விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத் துளங்கொள் இருத்திய ஒருத்தனிடம் என்பர் வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தாவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே.” திருச்சாத்த மங்கை: இது சாந்தை என மருவி வழங்கும். இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே உள்ள திருக் கோயிலுக்கு அயவந்தி என்று பெயர். இங்கே கோயில் கொண்டிருப்பவர் அயவந்தீசுவரர். அம்பிகை மலர்க் கண் அம்மை. இது திருநள்ளாற்றிற்குத் தென் மேற்குத் திசையில் ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. திருநீல நக்க நாயனார் திருவவதாரம் செய்தருளிய தலம் இது. இந்த நாயனார் அய வந்தீசுவரரைத் தரிசனம் செய்யும் பொருட்டுத் தம்முடைய தர்ம பத்தினியாரோடு ஆலயத்துக்கு எழுந்தருளிய போது ஒரு சிலந்திப்பூச்சி சிவலிங்கப் பெருமான்மேல் விழுந்தது.