பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 - - பெரிய புராண விளக்கம்-7 அந்தப் பூச்சியை அந்த நாயனாருடைய பத்தினியார் பக்தி மிகுதியினால் தம்முடைய வாயினால் ஊதி அகற்றினார். அதைக் கண்ட அந்த நாயனார் அவ்வாறு தம்முடைய பத்தினியார் செய்தது உசிதமற்ற செயலென்று எண்ணித் தம்முடைய பத்தினியாரை விலக்கிவிட்டார். அயவந்தீசு வரர் அந்த நாயனாருடைய கனவில் தோன்றி அவருடைய பத்தினியார் ஊதிய இடத்தையல்லாமல் மற்ற இடங்கள் சிலந்தியினால் உண்டான கொப்புளங்களைப் பெற்றவை யாக இருப்பதைக் காட்டியிருளி அந்த மாதரசியாருடைய பக்தியை வெளிப்படுத்தி அந்த மாதரசியாரை மீண்டும் அந்த நாயனாரோடு சேர்த்தருளிய தலம் இது. நிறையினார் நீல நக்கன் நெடு மாநகர் என்று தொண்டர், அறையும் ஊர் சாத்த மங்கை' என்றும், " பொடிதனைப் பூசு மார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக் கொடியன சாய லாளோ ருடனாவதும் கூடுவதே கடிமணம் மல்கி நாளும் கமழும்பொழிற் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே." . என்றும் தேவாரத்தில் வருவனவற்றைக் காண்க. திருமருகல் : இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் மாணிக்கவண்ணேசுவரர். அம்பிகை வண்டுவார் குழல் அம்மை. இது திருப்புகலூரிலி ருந்து தென் கிழக்குத் திசையில் மூன்றரை மைல் தூரத்தில் உள்ளது. பாம்பு தீண்ட அந்த விடத்தினால் இறந்து போன ஒரு செட்டிப்பிள்ளையைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய sor/Trr, - - . . சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால்