120 பெரிய புராண விளக்கம்-; யாகிய பரம்பொருள் சிவபெருமானே என்னும் ஞானத்தைப் பெற்றவரும், வேணுபுரமாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய அ டி யே ங் க ளு ைட ய தலைவரும், பொன்னால் ஆகிய புரிகளைக் கொண்ட மூன்று நூல்கள் அடங்கிய பூணுாலை அணிந்த திருமார்பைப் பெற்றவரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் திருப்புக. லூருக்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு:
- அப்படிச் சின்னாள் சென்றபின்
ஆரூர் நகராளும் துப்புறழ் வேனிக் கண்ணுத லாரைத் தொழுதிப்பால் மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்தெங்கள் பொற்புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.’ அப்படி-திருநாவுக்கரசு நாயனார் திருமருகல் என்னும்: சிவத்தலத்தில் அவ்வாறு எழுந்தருளித் தங்கிக்கொண்டிருந்த. ச்:சந்தி. சில்-சில. நாள்-தினங்கள்: ஒருமை பன்மை மயக்கம், சென்ற-கழிந்த பின்-பிறகு. ஆரூர்.திருவாரூராகிய நகர்பெரிய சிவத்தலத்தை. ஆளும்-ஆட்சி புரிந்தருளும், துப்புபவளத்தை உறழ்-போலச் சிவந்த வேணி-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவரும் ஆகு பெயர். க்சந்தி. கண்ணுதலாரை-தமமுடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணை உடையவருமாகிய தியாகராஜப் பெருமானாரை: ாத்:சந்தி. தொழுது-அந்த நாயனார் வணங்கி விட்டு. இப்பால் -திருவாரூரில் தங்கிக் கொண்டிருந்தார். இதன் பிறகு. மெய். உண்மையாகிய, ப்:சந்தி. பொருள்-பரம் பொருள் சிவ பெருமானே என்னும். ஞானம்-ஞானத்தை. பெற்றவர்பெற்றவரும். வேணுபுரத்து-வேணுபுரமாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய. எங்கள்-அடியேங்களுடைய தலைவரும்; இது சேக்கிழார் தம்மையும் பிற திருத் தொண்: