பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 12.É. டர்களையும் சேர்த்துக் கூறியது. பொன்-தங்கத்தால் ஆகிய. புரி-புரிகளைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். முந்நூல்மூன்று நூல்கள் அடங்கிய பூணுரலை. நூல்: ஒருமை பன்மை. ம்யக்கம். மார்பரும்-திருமார்பைப் பெற்றவரும் ஆகிய திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். புகலூரில்-திருப்புகலூ ருக்கு; உருபு மயக்கம். வந்தார்-எழுந்தருளினார். பிறகு வரும் 242-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி - நாயனார் அவ்வாறு திருப்புகலூருக்கு எழுந்தருளத் தம்மு டைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த விருப்பத்தினால் வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய திருவுள் ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை எதிர் கொண்டு வரவேற்று அந்தத் திருப்புகலூரில் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரோடு தங்கிக் கொண் டிருக்கும் காலத்தில் வள்ளலாராகிய சிறுத்தொண்ட நாய னார் அந்த இரண்டு நாயன்மார்க்ளிடத்திற்கும் எழுந்தருள இகழ்வதற்கு அருமையாக இருக்கும் சீர்த்தியைப் பெற்ற திருநீலநக்க நாயனாரும் திருப்புகலூருக்கு எழுந்தருளினார்.' பாடல் வருமாறு: - - . பிள்ளையார் எழுந்தருளப் பெருவிருப்பால் வாகீசர் உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங் குடன்உறையும் நாளின்கண் வள்ளலார் சிறுத்தொண்டர். மற்றவர்பால் எழுந்தருள எள்ளரும்,சீர் நீலநக்கர் தாமும்எழுந் தருளினார்." பிள்ளையார்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எழுந்தருள-அவ்வாறு திருப்புக