திருநாவுக்கரசு நாயனார் புராணம் 123 பாங்கில்வரும் சீரடியார் பலருமுடன் பயில்கேண்மை நீங்கரிய திருத்தொண்டின் நிலைஉணர்ந்து நிகழ்கின்றார்.” ஆங்கு-அவ்வாறு. அணையும்-திருப்புகலூரில் எழுந் தருளும். அவர்களுடன்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடும், திருநாவுக்கரசு நாயனாரோடும். அப் பதியில்-அந்தச் சிவத்தலமாகிய திருப்புகலூரில் வாழும். அந்தணராம்-வேதியராக விளங்கும். ஓங்கு-ஓங்கியிருக்கும். புகழ்-புகழைப் பெற்ற, முருகனார்.முருக நாயனாருடைய, திரு-அழகிய மடத்தில்-திருமடத்தில். உடனாக-அந்த இரண்டு. நாயன்மார்களோடும் கூடி, ப்:சந்தி. பாங்கில் வரும்-தங்களுடைய பக்கத்தில் வரும். சீர்-சீர்த்தியைப் பெற்ற அடியார்-அடியவர்கள் ஒருமை பன்மை மயக்கம். பலருமுடன்-பலரோடும். பயில்-பழகும். கேண்மை-நட்பு" நீங்கரிய-தம்மை விட்டு அகலுவதற்கு அழுமையாக உள்ள. திருத் தொண்டின்-திருத் தொண்டுகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிலை-நிலையை. உணர்ந்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தெரிந்து கொண்டு. நிகழ்கின்றார். திருப்புகலூரில் தங்கியிருப்பவரானார். பிறகு வரும் 244-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத் திருப்பதி கங்களாகிய சொற்சுவை பொருட்சுவை என்னும் சுவை களாகிய செழுமையைப் பெற்று விளங்கும் .ெ ச ந் த மி ழ் மொழியில் அமைந்தவற்றினுடைய வகைகளை வாழ்த்தி மகிழ்ச்சியை அடைந்து இமயமலை அரசனுடைய புதல்வியும், மடப்பத்தைக் கொண்டவளும், பொம்மையைப் போல என்றைக்கும் மாறாத அழகைப் பெற்றவ ளும் ஆகிய பார்வதி தேவியை தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய் திருப்பவராகிய அக்கினிசுவரருடைய தங்கத்தைப் போன்ற திருவடிகளில் விருப்பத்தைப் பெற்ற திருத்தொண்டர்களி
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/129
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
