திருநாவுக்கரசு நாயனார் புராணம் • 7 தருளி அழகைப் பெற்ற உயரமாக நிற்கும் மாடங்களைப் பெற்ற திருநல்லூரை அடைந்தார். பாடல் வருமாறு: ' காலநாள் அங்கமர்ந்து தம் தலைமேல் தாள்வைத்த ஆலமார் மணிமிடற்றார் அணிமலர்ச்சே வடிநினைந்து சேலுலாம் புனற்பொன்னித் - தென்கரைஏ றிச்சென்று கோலம்ள்ே மணிமாடத் திருநல்லூர் குறுகினார். ' கால-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பல, நாள். தினங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அங்கு-அந்தத் திருப் பழனத்தில். அமர்ந்து-தங்கிக் கொண்டிருந்து. தம்-தம்மு டைய தலைமேல்-தலையின் மேல். தாள்-தம்முடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். வைத்த-வைத்தவ ராகிய கலியாணசுந்தரேசுவரரும்; வினையாலனையும் பெயர். ஆலம்-திருமால் பள்ளி கொண்டருளிய பாற் கடலில் எழுந்த ஆலகால நஞ்சை. ஆர்-விழுங்கிய. மணிநீலமணியைப் போன்ற நீல நிறத்தைப் பெற்ற. மிடற்றார். திருக்கழுத்தை உடையவராகிய அந்த ஆபத்சகா யேசுவரருடைய. அணி. அழகிய. மலர்-செந்தாமரை மலர்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சே-சிவந்து விளங்கும். அடி. திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். நினைந்து-தியானித்து. சேல்-சேல் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். உலாம்-உலாவித் திரியும். புனல்- -- நீர் ஒடும். பொன்னி-பொன்னைக் கொழிக்கும் காவிரியாற் றினுடைய 'பொன்னி பொன் கொழிக்கும்' என்று வரு தலைக் காண்க. த்:சந்தி. தென்கரை-தெற்குக் கரையின் மேல். ஏறி.அந்த நாயனார் ஏறி. ச்:சந்தி. சென்று-மேலே எழுந்தருளி. கோலம்-அழகைப் பெற்றவையும்; வினையால
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
