128 - - பெரிய புராண விளக்கம் மனத்துடைய-வைத்துணரும் திருவுள்ளத்தைப் பெற்ற, பிள்ளையாருடன்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு; ஒரு நெறிய மனம் வைத் துணர் ஞான சம்பந்தன்.’’ என்று அந்த நாயனாரே தம்மை கருதிப்படுவதைக் காண்க. அரசும்-திருநாவுக்கரசு நாயனா ரும்:திணை மயக்கம். வரு-தங்கியிருக்கும். நீர்-கங்கையாற்றின் புனலை. செம்-சிவப்பாக இருக்கும். சடை-தம்முடைய தலையில் உள்ள சடாபாரத்தில்.க்:சந்தி. கரந்தார்-மறைத்து வைத்திருப்பவராகிய பிரம புரீசுவரர். திருஅம்பர்-திருக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருஅம்பர்ப் பெருந் திருக் கோயிலுக்கு. வணங்கினார்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி அந்தப் பிரமபுரீசுவரரைப் பணிந்தார். திரு அம்பர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இது அம்பர்ப் பெருந்திருக்கோயில் எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பிரம் புரீசுவரர். அம்பிகை பூங்குழல் அம்மை. தீர்த்தம் பிரம தீர்த்தம். தலவிருட்சம் புன்னை மரம், இது அம்பர் மாகாளத் துக்குக் கிழக்குத் திசையில் முக்கால் மைல் தூரத்தில் உள்ளது. இது சோமாசிமாற நாயனார் முத்தியைப் பெற்ற சிவத்தலம். பிரமபுரீசுவரருடைய சந்நிதி ஒரு கட்டு மலை யின் மேல் உள்ளது. பிரமபுரீசுவரருக்குப் பின் பக்கத்தில் பார்வதி பரமேசுவரருடைய திருவுருவங்கள் தீட்டப் பெற்றி ருக்கின்றன. இங்குள்ள ஆலயத்திற்குப் பெருந்திருக்கோயில் என்பது பெயர். அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்’ என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி யதைக் காண்க. இந்தத் தலத்தில் உள்ள திருக்கோயிலைக் கோச்செங்கட் சோழ மன்னர் கட்டுவித்தார். இந்த மன்னர் திருவானைக்காமுதல் அம்பப் பெருந்திருக்கோயில் ஈறாக உள்ள 64 மாடக் கோயில்களைக் கட்டுவித்தார். கோயில் என்பது கட்டுமலையையும், மாடக் யானைகள் ஏற
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
