பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 129 கர ற முடியாமல் இருக்கும் சந்நிதியையும் உடையது. இந்தத் தலத்தைப் ற்றிய பாசுரம் ஒன்று வருமாறு : எரிதர அல்ைகையில் ஏந்தி எல்லியின் நரிதிரிகானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணன் வன் கோயில் சேர்வரோ.' இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தார பஞ்சமப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு அபாசுரம் வருமாறு : . "அழகரை அடிகளை அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை உமிழ்திரை உலகினில் ஒதுவீர் கொண்மின் தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.’’ பிறகு வரும் 247-ஆம் கவியின் கருத்து வருமாறு : திருநாவுக்கரசு நாயனார் செங்குமுத மலர்கள் மலரும் வாவியைப் பெற்ற திருக்கடவூருக்கு அடைந்தருளி சினம் பொங்கி எழுந்த வெம்மையைக் கொண்ட யமனை தம்மு டைய திருவடியினால் உதைத்துத் தரையில் விழச் செய்த தங்கத்தைப் போன்ற அமிர்தகடேசுவரருடைய திருவடி களை அந்த நாயனார் வணங்கித் துதித்து விட்டுக் குங்குலியக் கலய நாயனார் வாழும் திருக்கடவூரில் உள்ள அவருடைய திருமடத்தில் குறைகள் அறுமாறு அந்தத் திருமடம் உள்ள அந்தக் குங்குலியக் கலய நாயனாருடைய திருமாளிகையில் சிவபெருமானுடைய அடியவர்களோடு அந்த நாயன்மார்கள் திருவமுது செய்தருளினார்கள்." பாடல் வருமாறு : . . செங்குமுத மலர்வாவித் திருக்கடவூர் அணைந்தருளிப் பொங்கியவெம் கூற்றடர்த்த . பொன்னடிகள் தொழுதேத்திக் தி-9 -