பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 131 யமனை அமிர்தகடேசுவரர் தம்முடைய திருவடியால் உதைத்தருளித் தரையில் விழச் செய்த தலம் இது. காலசங் கார மூர்த்திக்குத் தனியாக ஒரு சந்நிதி உண்டு. குங்குலியக் கலய நாயனாரும், காரி நாயனாரும் வாழ்ந்திருந்து முக்தியை அடைந்த தலம் இது. இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகர் கள்ளவாரணப் பிள்ளையார். இந்தத் திருக்கோயிலில் வில் வாரணியேசுவரர், பாபஹரேசுவரர், புண்ணிய வர்த்தனே சுவரர் என்னும் திருநாமங்களோடு சிவலிங்கப் பெருமான்கள் உள்ளனர். இந்தச் சிவத்தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாய னார் திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை என்பவை அடங்கிய திருப்பதிகங்களைப் பாடியருளியிருக் கிறார். அவற்றுள் ஒரு திருநேரிசை வருமாறு : மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மையல் எய்தில் விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வார்.ஆர் பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க் கென்றும் கண்ணிடை மணியர் போலும் கட் ஆர்வீ ரட்ட னாரே...' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு : - - ' குழைத் திகழ் காதினன் வானவர். கோனைக் குளிர்ந்தெழுந்து பழக்கமொ டர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த - தழற்பெர்தி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற : உழக்கிய சேவடி யான் கட ஆருறை உத்தமனே."