334 பெரிய புராண விளக்கம்-7 - திருவடிகளையும்: ஆகு பெயர். தொழுது-வணங்கி விட்டு. அகன்று-அந்தத் திருக்கடவூர்த் திருமயானத்தை விட்டுப் புறப்பட்டு. தேர்-இரதம். மனனும்-நின்று கொண்டிருக்கும். மணி-அழகைப் பெற்ற வீதி-திருவீதியைக் கொண்ட, த்:சந்தி. திருவாக்கூர்-திருவாக்கூருக்கு. சென்று-அந்த நாயனார் எழுந்தருளி. அணைந்தார்-அடைந்தார். திருக்கடவூர் மயானம்: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பிரமபுரீசு வரர். அம்பிகை மலர்க்குழ்ல் மின்அம்மை. தீர்த்தம் காசி தீர்த்தம். இது இந்தக் காலத்தில் திருமெய்ஞ்ஞானம் என்று வழங்கும். இது திருக்கடவூருக்குக் கிழக்குத் திசையில் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்தத் தலத்திற்குத் தெற்குத் திசையில் அரை மைல் தூரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அது மிகவும் சிறப்பைப் பெற்றது. அந்தக் கிண் ற்றிலிருந்து தான் திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கு ஒவ்வொரு நாளும் திருமஞ்சனத்துக்கு உரிய நீரை எடுத்துக் கொண்டு செல் கிறார்கள். பங்குனி மாதம் வரும் சுக்கில பட்சத்தில் அசுவினி நட்சத்திரத்தில் இந்தக் கிணற்று நீரில் நீராடுவது நல்ல பயனைத் தரும் என்று ஆன்றோர் கூறுவர். மற்றக் காலங்களில் அவ்வாறு அமிர்தகடேசுவரருக்கு உர் . திருமஞ் சனத்திற்கு இந்தக் கிணற்றில் உள்ள நீரைப் பயன்படுத்து வதை அல்லாமல் வேறு எந்தக் காரியத்திற்கும் இதைப் பயன் படுத்துவது இல்லை. அமிர்தகடேசுவரர் பிரம தேவனை நீறாக்கி அவனை மீண்டும் உயிர் பெறச் செய்தருளி அவனுக்குப் படைக்கும் தொழிலை வழங்கியருளிய தலம் இது. இதைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : சூலம் ஏந்துவர் தோலுடை ஆடையர் ஆலம் உண்டமு தேமிகத் தேக்குலர் கால காலர் கடவூர் ம்யானத்தார் - மாலை பார்பர் பெருமான் அடிகளே."
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/140
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
