பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 137, " ஓதிற் றொரு நூலும் இல்லை போலும் உணரப்படாததொன் றில்லை போலும் காதிற் குழையிலங்கப் பெய்தார் போலும் கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும் வேதத்தோ டாறங்கம் சொன்னார் போலும் விடம்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும் ஆதிக் களவாகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்ப னாரே.” "ஆக்கூர் மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு.’’ என்று கபில தேவ நாயனார் பாடியருளியதைக் காண்க. - பிறகு வரும் 249-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "தம்மை அடைந்தவர்களாகிய பக்தர்களுடைய தஞ்ச மாக விளங்கும் இடமாக இருப்பவரும், திருவாக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம் என்னும் திருநாமத்தைப் பெற்ற திருக் கோயிலில் பக்தி மிகுதியாக உண்டாகி அந்தத் திரு. நாவுக்கரசு நாயனார் பேராவல் உண்டாகுமாறு தான்றோன் தறியப்பரை வணங்கி விட்டு ஒரு குற்றமும் இல்லாத செந் தமிழ் மொழியில் அமைந்த தொடுத்த மாலையாகிய ஒரு. திருப்பதிகத்தை அந்தத் தான்றோன்றியப்பருக்குச் சாத்தி விட்டு, நீளமாக இருந்து அசைந்து ஆடும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின மேற் பெற்றவராகிய சிவபெருமா னார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் தலங். களில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான்களைப் பணிந்து விட்டு உடனே தம்மை அடைந்தவர்களாகிய பக்தர் களுடைய தலைவனாகிய நேத்திரார்ப்பனேசுவரன் எழுந், தருளியிருக்கும் திருவிழிமிழலையை. பாடல் வருமாறு: சார்ந்தார்தம் புகலிடத்தைத் தான்தோன்றி மாடத்துக்