2.138 - - பெரிய புராண விளக்கம்-7 கூர்ந்தார்வம் உறப்பணிந்து கோதில்தமிழ்த் தொடைபுனைந்து வார்ந்தாடும் சடையார்தம் பதிபலவும் வணங்கியுடன் சேர்ந்தார்கள் தம்பெருமான் திருவீழி மிழலையினை.’’ இந்தப் பாடல் குளகம்.சார்ந்தார்தம்-தம்மை அடைந்த வர்களாகிய பக்தர்களினுடைய; சார்ந்தார்: ஒருமை பன்மை மயக்கம், தம்: அசை நிலை. புகல் இடத்தை-தஞ்சமாக விளங்கும் இடமாக இருப்பவராகிய திருவாக்கூரில் உள்ள தான்றோன்றி மாடம் என்னும் திருநாமத்தைப் பெற்ற திருக்கோயிலில், த்: சந்தி, தான்றோன்றி மாடத்து-தான் றோன்றி மாடத்தில். க்சந்தி, கூர்ந்து-பக்தி மிகுதியாக ..உண்டாகி. ஆர்வம்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பேராவல். உற-உண்டாகுமாறு. ப்:சந்தி. பணிந்து-அந்தத் தான்றோன்றி யப்பரை வணங்கி விட்டு, கோது-ஒரு குற்ற மும், இல்-இல்லாத கடைக்குறை. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த த்:சந்தி தொடை-தொடுத்தலைப் பெற்றமாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. புனைந்து-அந்தத் தான்றோன்றியப்பருக்குச் சாத்தி விட்டு, வார்ந்து-நீளமாக அமைந்து. ஆடும்-அசைந்து ஆடிக் கொண்டிருக்கும். சடை யார் தம்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற். பெற்றவராகிய சிவபெருமானார். தம்: அசை நிலை. பதிதிருத்தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பலவும்-பலவற்றிற். கும் அந்த நாயனார் எழுந்தருளி, வணங்கி-அந்தத் தலங் களில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான்களைப் பணிந்து விட்டு. உடன்-உடனே. சேர்ந்தார்கள் தம்-தம்மை அடைந் தவர்களாகிய பக்தர்களினுடைய. தம்: அசை நிலை. பெருமான்-தலைவனாகிய நேத்திரார்ப்பணேசுவரன் எழுந் தருளியிருக்கும். திருவிழிமிழலையினை-திருவிழிமிழலையை. திருவிழிமிழலை: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
