பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 139 நேத்திரார்ப்பனேசுவரர், விழியழகேசுவரர், வீழிநாதர் என்பவை. அம்பிகை சுந்தராம்பிகை. தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம். தலவிருட்சம் வீழிச் செடி, இது குத்தாலத்திலிருந்து தெற்குத் திசையில் ஆறு மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் எந்த இடத்திலும் வீழிச் செடிகள் நிறைந்து வளர்ந்து நிற்பதால் திருவிழிமிழலை என்னும் பெயர் இந்தத் தலத்திற்கு வந்தது. திருக்கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய திருக்குளம் உள்ளது. மூலவராகிய சிவலிங்கப் பெரும f"áðg“iT“ ருக்குப் பின்புறத்தில் பார்வதி பரமேசுவரர்களினுடைய திரு வுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சக்கராயுதத்தைப் பெற விரும்பித் திருமால் வீழி நாதரைப் பூஜை புரியும் போது ஒரு நாள் ஒரு மலர் குறைவாக இருக்க அந்தத் திருமால் தம்முடைய விழியையே தோண்டி விழிநாதருக்குச் சாத்தித் தாம் பெற விரும்பிய சக்கராயுதத்தைப் பெற்ற தலம் இது. திருமணக் கோலத்தோடு எழுத்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியினுடைய திருவடிகளில் திருமால் தம்முடைய கண்ணைப் பறித்து அருச்சனை புரிந்த அடையாளமும் இருக்கிறது. . . . . . நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆ யிரம்பூக் கொண்டு வேற்றுழி ஒருநாள் ஒன்று குறையக்கண் ணிறைய இட்ட ஆற்றலுக் காழி நல்கி . . . அவன்கொணர்ந் திழிச்சும் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி - மிழலையுள் விகிர்த னாரே' என்று திருக்குறுக்கை வீரட்டத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசையில் திருமால் தம்மு டைய கண்ணைப் பிடுங்கி வீழ நாதரை அருச்சித்த செய்தி உள்ளது. - - : * : விழிநாதர் எழுந்தருளி பிருக்கும் இடம் விண்ணிழி விமானம் என வழங்கும். திருமால் சக்கராயுதம்