திருநாவுக்கரசு நாயனார் புராணம் 147 வணங்க-பணிய, வணங்கி-தாமும் அந்த வேதியர்களைப் பணிந்து விட்டு. உள்-வீழிநாதருடைய ஆலயத்துக்குள். புக்கார்-அந்த நாயனார் நுழைந்தார். பிறகு உள்ள 251-ஆம் கவியின் கருத்து வருமாறு: திருவீழியில் உள்ள மாடங்கள் உயர்ந்து நிற்கும் ஒரு திரு வீதியில் அலங்காரங்களைப் புரிந்து அப்தத் திருவிழி மிழலையில் வாழும் வேதியர்கள் தங்களுடைய திரு மாளிகைக்கு முன்பு உள்ள வாசல்களில் அழகைப் பெற்ற திருவிளக்குக்களை வைத்தும், உயரமாக உள்ள வாழை மரங்களையும், தழைகளைக் கொண்ட கமுக மரங்களையும் வரிசை வரிசையாக நட்டு வைத்து நீர் நிரம்பிய தங்கத்தால் ஆன பூர்ணகும்பத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு அந்த வேதியர்கள் பெருமை பெருகி எழும் வாகீச ராகிய திருநாவுக்கரசு நாயனாரும், ஆளுடைய பிள்ளையா ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பல திருத் தொண்டர்களும் அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை அடைந்து விண்ணிழிந்த விமானத்தைப் பெற்ற விழிநாதரு டைய திருக்கோயிலுக்கு முன்பு உயரமாக நிற்கும் கோபுர வாசலுக்கு எழுந்தருளி அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: - மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயில் மணிவிளக்கு நீடுகதலி தழைப்பூகம் கிரைத்து நிறைபொற் குடம் எடுத்துப் பீடு பெருகும் வாகீசர் - பிள்ளை யாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண்ணிழிந்த கோயில் வாயில் சென்றணைந்தார்.' மாட-திருவீழி மிழலையில் உள்ள மாடங்கள் உயரமாக நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். வீதி-ஒரு திருவீதியில். அலங்கரித்து-அலங்காரங்களைப் புரிந்து. அந்த அலங்காரங்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
