350 பெரிய புராண விளக்கம்-1 சடை-சடாபாரத்தைக் கொண்ட ம வு லி - தலையையும் பெற்றவரும்: வினையாலணையும் பெயர். வென்றி-வெற்றி யைப் பெற்ற விடையார்-இடப வாகனத்தை ஒட்டுபவரும் ஆகிய விழிநாதருடைய. சேவடிக்கீழ்-செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்த திருவடிகளின் கீழ் அடி: ஒருமை பன்மை மயக்கம். விழுந்தார்-அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கி விட்டு; முற்றெச்சம். எழுந்தார். பிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு முற்றெச்சம்.விம்மி னார்-விம்மி விம்மி அழுதருளினார். - திருவிழிமிழலை: இந்தத் தலத்தைப் பற்றி முன்பே ஓரிடத்தில் எழுதினோம்; ஆண்டுக் கண்டுணர்க. அடுத்து வரும் 253-ஆம் கவியின் கருத்து வருமாறு: - அந்தத் திருநாவுக்கரசு நாயனார் விழிநாதருடைய திருக்கோயிலுக்குள் எழுந்தருளித் தம்முடைய திருக்கரங் களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் அந்த விழிநாதருடைய திருவடிகளை வாழ்த்தி வணங்கி விட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் சேர்ந்திருந்த பக்தி யினால் தம்முடைய திருவுள்ளம் கரைந்து கரைந்து உருக். கத்தை அடையத் தம்முடைய திருமேனியின் மே வழிந்து இறங்கும் தம்முடைய விழிகளிலிருந்து அருவியைப் போல நீர் வழிந்து தரையில் விழத் தாம் அந்த விழிநாதரைப் புகழும் இனிய சுவையைப் பெற்ற சொற்கள் அடங்கிய மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை, 'செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்' என்றுதொடங்கி யாவரும் உஜ்ஜீவனத்தை அடையும் வழியை உணர்த்தும் ஒரு திருத்தாண்டகத்தை அந்த நாயனார் திருவாய் மலர்'s தருளிச் செய்துவிட்டு அந்தத் திருவீழி மிழலையிலிருந்து அகலாத விருப்பம் தம்முடைய திருவுள்ளத்தில் சிறப்பை அடைந்து ஓங்கி எழ. பாடல் வருமாறு: .
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/156
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
