பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - பெரிய புராண விளக்கம்-7 வண்ணத்தைப் பெற்ற. மேனி-திருமேனியைக் கொண்ட மணி-மாணிக்க. வெற்பை-மலையைப் போன்றவரை; ചഖഥ ஆகுபெயர். ப்: சந்தி. பூ-மலர்கள், ஒருமை பன்மை மயக்கம். நீர்-மிதந்து வரும் நீர் நிரம்பிய. மிழலையினில். குளம், ஆறு: குட்டை, வாவி முதலிய நீர் நில்ைகளைப் பெற்ற திருவிழி மிழலையில். போற்றி-விழிநாதரை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் வாழ்த்தி வணங்கி விட்டு ப்:சந்தி. பல்-பல. நாள். தினங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிரியா-அந்தத் திருவீழி. மிழலையை விட்டுப் பிரிந்து போகாத நிலைமையினால்நிலையினால் பயில-பல தடவைகளும் பழகியிருக்குமாறு. க்சந்தி. கும்பிட்டு-அந்த விழிநாதரைத் தம்முடைய திருக் கரங்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு. இருப்பாராய்-அந்தத் திருவிழிமிழலையில் தங்கியிருப்பவராக. அந்நான் மறையோர்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் - என்னும் . . . நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய அந்த வேதியர்கள் வாழும். மறையோர்: ஒருமை பன்மை மயக்கம், திருப்பதியில்-அந்தத் திருத்தல மாகிய திருவிழிமிழலையில். மெய்ப் மை-உண்மையாகிய, அரும்-புரிவதற்கு அருமையாக இருக்கும். தவர்கள் தவத் தைப் புரிந்த அந்தத் திருநாவுக்கரசு நாயனாராகிய சுவாமிகள். இருந்தார்.தங்கிக் கொண்டிருந்தார். - பிறகு வரும் 255-ஆம் கவியின் கருத்து வருமாறு : - சீர்த்தியினால் விளக்கத்தைப் பெற்று வாழும் திருத் தொண்டராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவீழி : -மிழலையில் தங்கிக்கொண்டிருந்து சிலதினங்கள் கடந்தபிறகு மழை பெய்யாமல் சுருக்கத்தை அடைந்து நீர்வளத்தைப் பெற்ற பொன்னைக் கொழிக்கும் காவிரிஆறும் நீர்வரும் 'ருவம் மாறிப்போனவுடன் அந்தக் காவிரி ஆற்றில் ஒடும் புனலினால் உண்டாகிய உணவுகள் குறைந்துபோய் இந்தப் ஆமண்ட்லத்தில் வாழும் நிலைபெற்ற பல உயிர்கள் யாவும் . .