பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 155 இந்த உலகத்தில் மிகுதியாக இருந்த இல்லாமையாகிய துன் பத்தினால் துன்பத்தை மிகுதியாக அடையும் தரித்திரம் எங்கும் பரவியது. பாடல் வருமாறு: சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சிலநாட் சென்றதற்பின் மாரி சுருங்கி வளம்பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவருகி நிலவும் பலமன் னுயிர்களெலாம் பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர் வறும்ை பரந்ததால். சீரின்-சீர்த்தியினால். விளங்கும்-விளக்கத் ைத ப் பெற்று வாழும். திருத்தொண்டர்-திருத் தொண்டராகிய அந்தத் , திருநாவுக்கரசு நாயனார். இருந்து-திரு வீழி மழலையில் தங்கிக் கொண்டிருந்து. சிலநாள்-சில தினங்கள்: ஒருமை பன்மை மயக்கம். சென்றதற் பின்-கடந்த தற்குப் பிறகு. மாரி. மழை. சுருங்கி.பெய்யாமல் சுருக் கத்தை அடைந்து வளம்-நீர் வளத்தைப் பெற்ற, பொன்னி.பொன்னைக் கொழி க்கு ம் காவிரியாகிய, பொன்னி பொன் கொழிக்கும்.' என வருதலைக் காண்க. நதியும்.ஆறும். பருவம்-நீர்வரும் காலம். மாறுதலும்மாறிப் போனவுடன் நீரின்-அந்தக் காவிரி ஆற்றில் ஒடும் புனலினால். இயன்ற-உண்டாகிய, உணவு-உணவுப்பொருள் களாகிய நெற்கள். நீர், பலவகை வியஞ்சனங்கள் முதலி .ു ബ്; ஒருமை பன்மை மயக்கம். அருகி-குறைந்து போய்: கிடைப்பதற்கு அருமையாகப் போய். நிலவும்-அந்தப் பூமண்டலத்தில் வாழும். பல-பலவாகிய மன்-நிலை பெற்ற உயிர்கள்-மக்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் பிராணிகள், புழுக்கள், பூச்சிகள் முதலிய உயிர்கள். எலாம்-யாவும்: இடைக்குறை. பாரில்-இந்த உலகத்தில், .. மலிந்த-மிகுதியாக இருந்த இலம்பாட்டில்-இல்லாமையாகிய - i =