பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெரிய புராண விளக்கம்-? கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு - f வைத்தார். மிழலை நாயகனார்.’’ - கால-இந்தப் பஞ்ச கால்த்தினுடைய நிலைமையால்நிலைமையினால், நிலை பெற்று இருக்கும் தன்மையினால், உங்கள்-உங்களுடைய, கருத்தில்-உள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். வாட்டம்-வாட்டத்தை. உlர்-அடையா மல் இருப்பீர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எனினும்என்றாலும்; இடைக்குறை. ஏல-ஏற்கனவே. உம்மைஇரண்டு நாயன்மார்களாகிய உங்களை வழிபடுவார்க்கு. மக்களுக்கு, ஒருமை பன்மை மயக்கம். அளிக்க-வழங்கும் பொருட்டு. அளிக்கின்றோம். யாம் வழங்குகிறோம். என்று: -என. கோலம்-தம்முடைய திருக்கோலத்தை. காண-அந்த இரண்டு நாயன்மார்களும் தரிசிக்குமாறு. எழுந்தருளி. கனவில் எழுந்தருளி. க்சந்தி. குலவும்-அமையும். பெருமை. பெருமையைப் பெற்ற, இருவர்க்கும்-அந்த இரண்டு நாயன் மார்களுக்கும். ஞாலம்-இந்த உலகத்தில் வாழும் மக்கன் யாவரும்; இட ஆகு பெயர். அறிய-தெரிந்து கொள்ளுமாறு: ப்:சந்தி. படிக்காசு-திருக்கோயிற் படிகளில் காசுகளை. படி: ஒருமை பன்மை மயக்கம். காசு: ஒருமை பன்மை மயக்கம். மிழலை-திருவிழிமிழலையில் உள்ள திருக்கோயிலில் எழுந்தரு வியிருக்கும்: ஆகு பெயர். நாயகனார்-தலைவராகிய, விழிநாதர். வைத்தார். வைத்தருளினார். :- x. பிறகு தரும் 258-ஆம் கவியின் கருத்து வருமாறு:

  • திருவிழிமிழலையில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் விண்ணின்றிழிந்த விமானத்திற்குக் கிழக்குத் திசையிலும் மேற்குத் திசையிலும் இருக்கும் பலி பீடங்களில் பெருமை. யைப் பெற்றவரும், புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளியவரும், ஆண்மையையும் தகுதியையும் பெற்ற வரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கும் திரு'