*160 - பெரிய புராண விளக்கம்-7 றிலும். காசு-பொற்காசுகளை ஒருமை பன்மை மயக்கம். :படி-ஆலயத்தின் படிகளில்; ஒருமை பன்மை மயக்கம். வைத்தருள-iழிநாதர் வைத்தருள. நானிலத்தில். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு திணைகளைப் பெற்ற இந்த நிலவுலகத்தில். எண்-கணக்கு, இல்-இல்லாத; கடைக்குறை. அடியாருடன்-அடியவர்களோடு: ஒருமை பன்மை மயக்கம். அமுது செய்து-திருவமுது செய்து கொண்டு. அங்கு-அந்தத் திருவீழி மிழலையில். இருவர் களும்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திரு நாவுக்கரசு நாயனார் ஆகிய இரண்டு நாயன்மார்களும். இருந்தார்தங்கிக்கொண்டிருந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அடுத்து வரும் 259-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், திரு நாவுக்கரசு நாயனாரும், இருட்டைப் போலக் கரிய நிறத் தைப் பெற்ற திருக்கழுத்தைக் கொண்ட தேவர்களுடைய தலைவனாகிய வீழிநாதன் வழங்கிய திருவருளினால் அடி யேங்கள் இருவரும் பெற்ற படிக்காசுகளைக் கொண்டு பல வழிகளில் அமைந்த உணவுப் பொருள்களாகிய வளப்பம் பெருகி எழுமாறு பரமேசுவரனுடைய அடியவர்களாக இருப் பவர்கள் எல்லாரும் இங்கே வந்து சேர்ந்து உணவுகளை உண்பீர்களாக' என்று பகல், இரவு என்னும் இரண்டு வேளைகளிலும் பறைகளை அடிக்கச் செய்தும் வார்த்தை களால் திருவாய் மலர்ந்தருளிச் செய்தும் அவர்களுக்குச் சோற்றைப் படைக்கச் செய்தார்கள்; அதனால் துயரத்தை மிகுதியாக உண்டாக்கிய தாத்திரத்தை அந்த இரண்டு நாயன்மார்களும் போக்கிவிட்டார்கள். பாடல் வருமாறு: அல்லார் கண்டத் தண்டர்பிரான் அருளால் பெற்ற படிக்காசு பலவா றியன்ற வளம்பெருகப் பரமன் அடியா ரானார்கள்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/166
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
