162 பெரிய புராண விளக்கம்-? வர்களுக்கு அன்னத்தை இட்டார்-படைக்கச் செய்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். படைத்தவர்கள் சமையற்காரர் கள். துயர்-அதனால் டசி என்னும் துயரத்தை. கூர்-மிகுதி. யாக உண்டாக்கும். வறுமை-தரித்திரத்தை. தொலைத். திட்டார்- அந்த இரண்டு நாயன்மார்களும் போக்கிவிட். டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிறகு வரும் 260-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பரமேசுவரரும் திருவிழிமிழலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறையவரும் ஆகிய விழி நாதரிடத்தில் இமாசல அரசனுடைய புதல்வியும், பொம் மையைப் போல என்றும் மாறாத அழகைப் பெற்றவளும் ஆகிய பெரிய நாயகி அம்மையாருடைய அழகிய கொங்கை களிலிருந்து கறந்து சிவ ஞானத்தைக் குழைத்து ஒரு பொற்: கிண்ணத்தில் வைத்து ஊட்டிய பாலை இந்தத் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் குடித். தருளியவர் தம்முடைய அழகிய டெருமையைப் பெற்ற புதல் வர் ஆசையால் அந்தத்திருஞான சம்பந்த மூர்த்தி நா ய னார்வீழிநாதர் படியில் வைத்த பொற்காசை வட்டத்துடன் பெற்றார்; தம்முடைய திருக்கரங்களால் உழவாரத் திருத். தொண்டினையும் வேறு பல தொண்டுகளையும் புரிந்து வரும் பான்மையினால் வாகீசராகிய திருநாவுக்கரசு நாய னார் வட்டம் கொடுக்க வேண்டியிராத பொற்காசை விழி நாதருடைய ஆலயத்தில் உள்ள படியில் பெற்று மகிழ்ச்சியை அடைந்தார். பாடல் வருமாறு: ஈசர் மிழலை இறையவர்.பால் இமைய ப் பாவை திருமுலைப்பால் தேசம் உய்ய உண்டவர்தாம் திருமா மகனார் ஆதலினால் காசு வாசி யுடன் பெற்றார்: கைத்தொண் டாகும் படிமையினால்,
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
