பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 163 வாசி இல்லாக் காசுபடி பெற்று வந்தார் வாகீசர்.” ஈசர்-பரமேசுவரரும். மிழலை-திருவிழிமிழலையில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்; ஆகுபெயர். இறை வவர் பால்-எங்கும் நிறைந்திருப்பவராகிய வீழிநாதரிடத்தில். இமைய-இமாசல அரசனுடைய புதல்வியும்; ஆகுபெயர். இமைய: திணை மயக்கம் . ப்: சந்தி. பாவை-பொம்மையை, போல என்றும் மாறாத அழகைப் பெற்றவளும்; உவம ஆகு. பெயர். திருமுலைப்பால்-ஆகிய பெரியநாயகி அம்மை யாருடைய அழகிய கொங்கைகளிலிருந்து கறந்து சிவஞானத் தைக் குழைத்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்து ஊட்டிய பாலை, தேசம்-இந்தச் செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண் ணம். உண்டவர்தாம்-குடித்தருளியவர், தாம்: அசைநிலை. திருமா மகனார்-தம்முடைய அழகிய பெருமையைப் பெற்ற புதல்வர். ஆதலினால்-ஆகையால். காசு.அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வீழிநாதர் தம்முடைய ஆலயத் தின் படியில் வைத்த பொற் காசை. வாசியுடன்-வட்டம் கொடுக்கும் தன்மையே டு, பெற்றார் - அடைந்தார்; பெற்றுக் கொண்டார். கை-தம்முடைய திருக்கரங்களால்: ஒரு மை பன்மை மயக்கம். த்: சந்தி. தொண்டு-உழவாரத் திருத்தொண்டும், வேறு பல தொண்டுகளும்; ஒருமை பன்மை மயக்கம். ஆகும்-ஆக இருக்கும். படிமையினால். பான்மையினால், வாசி-வட்டம் கொடுக்க, இல்லா வேண்டியிராத, க்:சந்தி. காசு-பொற்காசை. படி-விழிதாத ருடைய ஆலயத்தில் உள்ள படியில். வாகீசர்.வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். பெற்று-பெற்றுக்கொண்டு. உவந்தார்-மகிழ்ச்சி அடைந்தார். வந்தார்.ஒவ்வொரு நாளும் வந்தார் எனலும் ஆம். - அடுத்து உள்ள 261- ஆம் கவியின் கருத்து வருமாறு: