பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 165 ளுடைய திரு மடங்களிலும். சோறு-அன்னத்தை. நாளும். ஒவ்வொரு நாளும். தொண்டர் - திருத்தொண்டர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. உண்ண - உண்ணவும். உண்ண-மேலும் உண்ணவும், த்:சந்தி, தொலையாது-திராமல், ஏ: அசைநிலை. ஏறு. மேலும் மேலும் ஏறிவரும். பெருமை-அந்த இரண்டு நாயன் மார்களுடைய பெருமையை. புவி-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். போற்ற-வாழ்த்தி வணங்குமாறு. இன்புற்று-அந்த இரண்டு நாயன்மார்களும் பேரானந்தத்தை அடைந்து. இருக்கும். அந்தத் திருவீழி மிழலையில் தங்கிக் கொண்டிருக்கும். அந்நாளில்அந்தக் காலத்தில் பிறகு உள்ள 262-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருவிழிமிழலையில் உண்டான பஞ்ச காலத்தி னுடைய தவறாகிய வறுமை அகன்று எல்லா இடங்களிலும் முழங்கும் மேகங்கள் மழையைச் சொரிந்த நீர் சேர்ந்து இந்த உலகம் முழுவதும் குளிர்ச்சியை அடைந்து உணவும் பொருள்களாகிய நெற்கள், வெல்லம், பால், வெண்ணெய், பலவசையான கறியமுதுகள் முதலியவை பெருக உண்டாகி நன்மைகள் சிறப்பாக அமைய இந்தச் சுயிட்ச காலத்திற்கு மூல காரணர்களாகிய பக்தர்களாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திருநாவுக்கரசு நாயனார் என்னும் இரண்டு நாயன்மார்களும் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களையும், அந்த வீழிநாத ருக்கு அணிந்து நீலகண்டராகிய சிவபெருமானார் எழுந் தருளித் தங்கியிருக்கும் வேறு சிவத்தலங்களுக்கும் எழுந் தருளி அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான்களைப் பணிவதற்கு அந்த இரண்டு நாயன் மார்களும் எண்ணத்தை அடைந்தார்கள்." பாடல் வருமாறு: -